மேட்டூர் அணை: அக். 9 நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 1,577 கனஅடியாக குறைந்துள்ளது தொடர்பாக...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1,874 கன அடியிலிருந்து 1,577 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 67.26 அடியிலிருந்து 66.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 29.60 டிஎம்சியாக உள்ளது.
Mettur Dam: Status as of October 9!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.