FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் செப். 8 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

8 செப்டம்பர் 2026, 6:28 pm IST
பகிர்:
Updated On : 8 செப்டம்பர் 2026, 6:28 pm IST

தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்

தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் செவ்வாய்க்கிழமை (செப். 8) தெரிவித்தார்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 3:37 pm IST

மீண்டும் சந்திக்கும் மோடி - புதின்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வருகின்ற வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 1:16 pm IST

ஒரு கேள்விக்காவது முதல்வர் விஜய் பதில் சொன்னாரா? மிசா பற்றி அமைச்சர்கள் படிக்க வேண்டும்! பெ. சண்முகம்

Updated On : 8 செப்டம்பர் 2026, 1:16 pm IST

தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டி

Updated On : 8 செப்டம்பர் 2026, 12:54 pm IST

சட்டப்பேரவை மாண்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

அதிமுகவில் விருப்ப மனு

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதா?

முதல்வரின் நேற்றைய பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு குறித்துதான் முதல்வர் பேசியிருக்கிறார் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

ரத்த அழுத்தம்

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு நேற்று திமுக நடந்துகொண்ட விதத்தால் மருத்துவர் இல்லாமலேயே அது சரியாகிவிட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவலர்கள்!

பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றினர்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

உருவ கேலி

உருவ கேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Updated On : 8 செப்டம்பர் 2026, 11:13 am IST

விற்றுத் தீர்ந்தன!

தீபாவளிக்கு முந்தைய நாள் ரயில் பயண முன்பதிவு இன்று (செப். 8) காலை தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்ததால், பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments