மீண்டும் வெளிநாடு செல்கிறாரா முதல்வர் விஜய்?
முதல்வர் விஜய் ஸ்விட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொள்வது குறித்து...
முதல்வர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதல்வா் விஜய் கடந்த செப்.10 ஆம் தேதியில் லண்டன் சென்றாா். இந்த பயணத்தில் ரூ. 15,300 கோடி மதிப்பில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் புதிய முதலீடுகளை தமிழகத்துக்குக் கொண்டுவருவதற்காக முதல்வர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய முன்னணி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
2024, 2025-ல் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டங்களில் அப்போதைய திமுக அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், வருகிற ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய்க்கு உலக பொருளாதார மன்றத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்விங்கி மற்றும் இயக்குநர் கைரூஸ் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற வருடாந்திரக் கூட்டம் 2027-ல் முதல்வர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
CM Vijay will attend World Economic Forum’s annual meeting in Switzerland
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.