நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்-கமலா தம்பதியினரின் மூத்த மகள் சாந்தி காலமானது தொடர்பாக...
சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்-கமலா தம்பதியினரின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி(71), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(செப்.20) காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிவாஜி கணேசன்-கமலா தம்பதியினனருக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்களும், சாந்தி, தேன்மொழி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில், சிவாஜி கணேசன்-கமலாவின் மூத்த மகளான சாந்தி நாராயணசாமி, கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
அவரது மறைவின்போது, அவரது சகோதரர்களான திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார், நடிகர் பிரபு மற்றும் சகோதரி தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர்.
தனது சகோதரர்களைப் போன்று பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்தபோதிலும், தமிழ் சினிமா வரலாற்றில் சாந்திக்கு ஆழமான தொடர்பு இருந்தது.
அண்ணா சாலையில் கலாசார அடையாளமாகவும், சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாகவும் திகழும் 'சாந்தி திரையரங்கிற்கு', தனது மகளின் நினைவாகவே சிவாஜி கணேசன் அந்த பெயரைச் சூட்டினார்.
திரைத்துறையில் திரைக்குப் பின்னாலும் தனது முத்திரையைப் பதித்த சாந்தி, குறிப்பாக 1974-ல் வெளியான தனது தந்தையின் பிரம்மாண்ட வெற்றிப் படமான 'தங்கப்பதக்கம்' படத்தை தயாரித்திருந்தார்.
சாந்தி நாராயணசாமி மறைவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் திரையுலகினர், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சாந்தியின் உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் சிவகுமார், இயக்குநர் வாசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சாந்தி நாராயணசாமி உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Shanthi Narayanasamy, the eldest daughter of legendary Tamil actor Sivaji Ganesan, passed away here on Sunday following a brief illness
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.