FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிமுகவில் இன்னும் 20 பேர் தயாராக உள்ளனர்: செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய 20 பேர் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...

20 செப்டம்பர் 2026, 12:05 pm IST
முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய 20 பேர் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "ஓராண்டு காலத்திலேயே ஆட்சி மாறும் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதெப்படி ஆட்சி மாறும்? 47 பேரில் 25 பேர் எங்களுக்கே வாக்களித்தனர், 7 பேர் ராஜிநாமா செய்து விட்டனர். பிறகு எப்படி தவெக ஆட்சி மாறும்?

இதனையே சொல்லிக்கொண்டிருந்தால் அதிமுகவில் மீதமுள்ளவர்களும் போய்விடுவார்கள். இன்னும் (அதிமுகவில்) 10 - 20 பேர் தயாராக இருக்கின்றனர். அவர்கள் எப்போது வருவார்கள் என சரியாகத் தெரியவில்லை. அப்போதுதான் உங்களுக்கு (இபிஎஸ்)ஆபத்து இருக்கிறது. அடுத்த முறை தேர்தல் வரும்போது, 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்.

Advertisement

Advertisement

திமுகவுடன் கூட்டணி சேர்ந்து பெரிய வெற்றி பெற்று, முதல்வராகி, ஆட்சி நடத்தலாம் என கனவு காண்கிறார்கள். இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தூய்மையான, நேர்மையான தலைவர் விஜய். முதல்வர் விஜய்யை போல ஒரு முதல்வர் கிடைக்கவில்லையே என வட மாநிலத்தோரும் கவலையில் உள்ளனர்.

அப்படியெனில், ஒரு நேர்மையான ஆட்சி வேண்டும் என இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

summary

There are another 10 to 20 people in the AIADMK who are ready to join the TVK, says Minister KA Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments