விநாயகர் சிலை கரைப்பு! சென்னையில் 92.965 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்!
சென்னையில் 92.965 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டது பற்றி...
விநாயகர் சிலைகள் கரைப்பால் இதுவரை 92.965 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சென்னையில் மட்டும் இந்து அமைப்புகளின் சாா்பில் 1,562 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கப்படுகின்றன.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த 4 நாள்களாக கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்தச் சிலைகள் பாலவாக்கம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் - நீலாங்கரை, பல்கலை நகா் - காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடை மேடை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த செப். 19 முதல் 20 ஆம் தேதி வரை விநாயகர் சிலைகள் கரைப்பால் 9,413 சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், 92.965 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக பாலவாக்கத்தில் 704 சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், மரப்பலகைகள், பூக்கள், உணவு கழிவுகள் உள்பட மொத்தமாக 77,200 கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் 6,868 கிலோவும், காசிமேட்டில் 1,305 கிலோவும், திருவொற்றியூரில் 340 கிலோவும், எண்ணூரில் 2,185 கிலோவும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Vinayagar idol immersion! 92.965 metric tonnes of waste removed in Chennai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.