FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூர்வாரும் பணியால் தண்ணீர் நிறுத்தம்! அமைச்சர் பதிலால் தஞ்சை விவசாயிகள் அதிருப்தி!

தூர்வாரும் பணிகள் காரணமாக கிளை ஆறுகளில் தண்ணீர் திறப்பது பற்றி..

22 செப்டம்பர் 2026, 12:40 pm IST
வேளாண் துறை அமைச்சர் வினோத் - video crop
பகிர்:

தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் திறக்கவில்லை என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று தொடக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

Advertisement

Advertisement

கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வராத நிலையில் முறை பாசனத்தை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே? என வேளாண் துறை அமைச்சர் வினோத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் அடுத்த சில நாள்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள் எனத் தெரிவித்தார்.

கிளை ஆறுகளில் தண்ணீர் வரவில்லையே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு,

பல கிளை ஆறுகளில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதால் தூர் வாரும் பணிகள் நிறைவு பெற்றதும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படும். தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இன்று அமைச்சர் வினோத் தற்போது தூர்வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறக்க முடியாது எனக் கூறிய பதில் விவசாயிகள் மத்தியில் சர்ச்சையாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments