FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெம் வீரமணி வழக்கு: 3 பேரின் ஜாமீன் தள்ளுபடி

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

ஜெம் வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று (செப். 30) உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் கடந்த ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே குற்றச்சாட்டில் வீரமணி உதவியாளர் கணேசன் கடந்த வாரம் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார்.

இதில், சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இவர்கள் முறையாக கைது செய்யவில்லை.

கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதனால், ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகவும்ம் இந்நிலையில் இருக்கையில் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

மேலும், கைது செய்து 40 நாட்கள் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் காவல் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்றும் இதனால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், மூன்று பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Gem Veeramani Case Bail Rejected for Three Persons

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments