குடைமிளகாய் புதினா புலாவ்
குடைமிளகாய் புதினா புலாவ் செய்முறை
தேவையானவை :
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
குடைமிளகாய் - 2
வெங்காயம், தக்காளி - தலா 1
புதினா, கொத்துமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு,
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனைப் போனவுடன் தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.
Related Article
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.