முகப்பு
உலகம்

சீனாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Updated On : 5 செப்டம்பர், 2022 at 11:47 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

சீனாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

மேற்கு சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவாகியுள்ளது.

Advertisement

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் அதிர்வு உணரப்பட்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.