அரக்கோணம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
அரக்கோணம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலினார்.
அரக்கோணம்: அரக்கோணம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலினார்.
அரக்கோணம் பஜார் மதுரை பிள்ளை தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (14). அரக்கோணம் அரசு உதவி பெரும் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பத்திரமாக மீட்பு
Advertisement
இவர் சனிக்கிழமை தனது நண்பர்களுடன் கீழ்க்குப்பம் பகுதியில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டு இருந்த போது நீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து அறிந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் தட்சிணாமூர்த்தியின் சடலத்தை வெளிக்கொணர்ந்தனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.