FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லியோ டிரைலரில் தகாத வார்த்தை: சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்! 

லியோ டிரைலரில் இடம்பெற்ற நடிகர் விஜய் கதாபாத்திரம் பேசிய தகாத வார்த்தை குறித்து விளக்கமளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். 

Updated On : 8 அக்டோபர் 2023, 11:19 am IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை 41 மில்லியன் (4.1 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 

படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இருப்பினும், டிரைலரில் நடிகர் விஜய் கதாபாத்திரம் தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் இந்த வார்த்தையை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் பல குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருப்பவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் லியோ பட நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதில், “திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும். முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய்ணா சந்தேகமுடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென வற்புறுத்தலாக கூறி படமாக்கினேன்.

யூடியூபில் தணிக்கைக் கிடையாது. திரையரங்குகளில் வெளியாகப் போவதில்லை. அது யார் மனதையும் புண்படுத்த எடுக்கவில்லை. கதைக்கு முக்கியமாக தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது புரியும். இந்த சர்ச்சைக்கு முற்றிலும் நான் பொறுப்பேற்கிறேன். இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசுவது அவ்வளவே” எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments