FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வினா-விடை வங்கி

வினா - விடை வங்கி... தேசியச் சின்னங்கள்!

தேசியச் சின்னங்கள் வினா - விடை வங்கி...

15 செப்டம்பர் 2026, 8:45 pm IST
- படம் | செய்யறிவு
பகிர்:

1. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மயில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது?

புதுக்கோட்டை

2. முகாலயர்கள் காலத்தில் மன்னர்களுக்காக விளைவிக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள்?

இமாம்பந்த்

3. இயற்கை தேசியச் சின்னங்களும், அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டுகள்?

தாமரை - 1950

ஆலமரம் - 1950

மாம்பழம் - 1950

மயில் - 1963

புலி - 1973

கங்கை ஆறு - 2008

யானை - 2010

ஆற்று ஓங்கில் - 2010

லாக்டோ பேசில்லஸ் - 2012

4. தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள்?

விலங்கு - வரையாடு

பறவை - மரகதப் புறா

மலர் - செங்காந்தள் மலர்

மரம் - பனை மரம்

5. தேசியக் கொடியின் வண்ணங்களும், அவை குறிப்பவையும்?

காவி நிறம் - வீரத்தையும், தியாகத்தையும் குறிக்கிறது

பச்சை நிறம் - செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது

வெள்ளை நிறம் - நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது

6. தேசியக் கொடியின் நடுவில் உள்ள கருநீல நிறத்தில் அமைந்துள்ள சக்கரம் எதை வலியுறுத்துகிறது?

அறவழியையும் அமைதியையும்

7. தேசியக் கொடியின் நீள, அகலம் எந்த விகிதத்தில் அமைந்துள்ளது?

3:2

8. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

பிங்காலி வெங்கையா (ஆந்திரம்)

9. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி எங்கு நெய்யப்பட்டது?

குடியாத்தம், வேலூர்

10. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது?

சென்னிமலை, ஈரோடு

11. சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக எப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டது?

ஜனவரி 26, 1950

12. சாரநாத் அசோகத் தூணின் அடிப்பகுயில் இடம்பெற்றுள்ள விலங்குகள் எவை?

யானை (ஆற்றல்)

குதிரை (வேகம்)

காளை (கடின உழைப்பு)

சிங்கம் (கம்பீரம்)

13. தேசிய கீதத்தை எழுதியவர் யார்?

இரவீந்திரநாத் தாகூர்

14. தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

ஜனவரி 24, 1950

15. தேசிய கீதம் முதன் முதலாக எங்கு பாடப்பட்டது? எப்போது?

கொல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு, டிசம்பர் 27, 1911

16. தேசிய கீதம் பின்பற்ற வேண்டியவை?

சுமார் 52 வினாடிகளில் பாட வேண்டும்

பாடும்போது அனைவரும் எவ்வித அசைவுகளுமின்றி நேராக நிற்க வேண்டும்

பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்

17. தேசியப் பாடல் வந்தே மாதரத்தை எழுதியவர்?

பங்கிம் சந்திர சட்டர்ஜி

18. தேசியப் பாடல் எங்கிருந்து பெறப்பட்டது?

ஆனந்த மடம் என்ற நாவலில் இருந்து

19. லாக்டோபேசில்லஸ் தேசிய நுண்ணுயிரியாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு?

2012

20. 16 ஆம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன?

ருபியா

21. ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தவர் யார்? வடிவமைக்கப்பட்ட ஆண்டு?

டி. உதயகுமார் , 2010 (தமிழகத்தைச் சேர்ந்தவர்)

22. நாடு விடுதலை பெற்ற நாளன்று மகாகவி பாரதியாரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடியவர்?

கர்னாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள்

23. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாள் என ஐநா அங்கீகரித்த ஆண்டு?

2007

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments