37 ஆண்டுகளுக்குப் பிறகு! மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்த கர்நாடக அரசு உத்தரவு!
37 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகத்தில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...
கர்நாடகத்தின் அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென மாநில அரசு கடந்த வியாழக்கிழமை (செப். 10) உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக கர்நாடக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, ஒவ்வொரு கல்வி நிலையங்களின் மாணவர் சங்கங்களிலும் ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள் , 2 பொதுச் செயலர்கள் மற்றும் 2 கூடுதல் செயலர்கள் என மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆண் - பெண் என இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் துணைத் தலைவர் மற்றும் கூடுதல் செயலர் பதவிகளில் பெண்களுக்குத் தலா ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
இத்துடன், கல்வியாண்டுத் துவங்கிய முதல் 5 வாரங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், பிரசாரங்களுக்கு போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஆகியவைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% வருகையைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு குற்றவியல் பதிவும் அவர்கள் மீது இருக்கக் கூடாது எனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கர்நாடகத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டீல் தலைமையிலான அரசு கல்வி நிலையங்களில் நடத்தப்படும் மாணவர் சங்கத் தேர்தல்களுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
The state government has ordered the conduct of student union elections in all educational institutions across Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.