தேர்தலில் 1 வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்! எங்கு தெரியுமா?
தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றது குறித்து...
ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், ஒரு வாக்கு மட்டுமே பெற்றது கவனம் பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று (செப். 14) அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் தித்வானா-குச்சமன் மாவட்டத்தில் உள்ள பர்பத்சர் நகராட்சியின் 13 வது வார்டில் பாஜகவைச் சேரந்த வேட்பாளர் கைலாஷ்சந்த் போட்டியிட்டார்.
Advertisement
Advertisement
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஹினா கானம் 376 வாக்குகள் பெற்று அந்த வார்டில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ரஷீத் கான் 195 வாக்குகளைப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, பாஜகவைச் சேரந்த வேட்பாளர் கைலாஷ்சந்த் ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார்.
இதுகுறித்து கைலாஷ்சந்த் கூறுகையில், “எனக்கு ஒரு வாக்கு கிடைத்தது. எனக்கான வாக்குரிமை 12 ஆவது வார்டில் உள்ளது. ஆனால், நான் 13 ஆவது வார்டில் இருந்து போட்டியிட்டேன். 12 ஆவது வார்டைச் சேர்ந்த ஒருவர் எனக்கு வாக்களித்துள்ளார்" என்று கூறினார்.
பர்பத்சர் நகராட்சியில் 25 வார்டுகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 13 வார்டுகளிலும், அதே நேரத்தில் பாஜக 12 வார்டுகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
A BJP candidate who contested the Rajasthan urban local body elections has drawn attention for securing only a single vote.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.