திருப்பங்கள் நிறைந்த மே.வங்க இடைத்தேர்தல்! களமிறங்குவதை உறுதி செய்த மமதாவின் வேட்பாளர்!
மேற்கு வங்க ரெஜிநகர் இடைத்தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாகக் கூறிய மமதா அணி வேட்பாளர் மீண்டும் களம் காண்கிறார்...
மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய மமதா அணி வேட்பாளர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூஸ் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால், நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன. ஆனால், மமதா தரப்பில் நந்திகிராமில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவை நேற்று (செப். 18) திரும்பப் பெற்றார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ரெஜிநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட மமதா அணி வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌதரி தனது வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக இன்று (செப். 19) பிற்பகல் அறிவித்தார். களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என அவர் கூறியது பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய சில மணிநேரங்களிலேயே ரெஜிநகர் தொகுதியில் போட்டியிடுவதாக ரபியுல் ஆலம் சௌதரி உறுதி அளித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் கூறியதாவது:
“இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். நாங்கள் மமதாவின் கட்சியின் இருக்கிறோம். அவரது விருப்பத்தைத் தாண்டி எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரது அறிவுறுத்தல்களின்படி நான் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டாமென முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நந்திகிராம் வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதால் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு ஆதரவளிப்பதாக மமதா பானர்ஜி அறிவித்தார். ஆனால், மமதா அறிவித்த சில மணிநேரங்களிலேயே மிலன் பழைய வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Mamata's candidate, for the by-election in Rejinagar constituency, has announced that he will contest the election after all.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.