டி20 தொடர்: சஞ்சு சாம்சன் விலகல், புதிய வீரர் தேர்வு!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல வீரர் சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். இதையடுத்து விதர்பாவைச் சேர்ந்த ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்றது இந்திய அணி. 2-வது டி20 ஆட்டம், புணேவில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் முதல் டி20யில் விளையாடிய பிரபல வீரர் சஞ்சு சாம்சன், காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
முதல் டி20யில் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் செய்தபோது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குச் சிகிச்சையும் ஓய்வும் தேவைப்படுகிறது. டி20 தொடரிலிருந்து விலகியுள்ள சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மா இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 29 வயது ஜிதேஷ் சர்மா விளையாடினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.