பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது:
அண்ணாமலை தர்மத்தை மீறி செயல்படுகிறார். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. பாஜகவுடான கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். இதுதான் எங்கள் நிலைப்பாடு.
Advertisement
Advertisement
எங்களை விமரிசிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். பாஜக தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். அண்ணாமலை குறித்து அதிமுக தொண்டர்கள் இனி விமரிசிப்போம்.
பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும்.தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலை வாக்கு வாங்குவார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்
பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை விமரிசித்திருந்ததால் அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.