FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இந்தியாவால் ஐபோன் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி! தமிழ்நாடும் சாதனை!

தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றது.

Updated On : 15 ஜனவரி 2025, 2:48 am IST
பகிர்:

தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றது.

ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கைப் பெற்றுள்ளது. ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இந்தியாவில்தான் தொடங்கியது.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஐபோனின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 77.8 ஆயிரம் கோடி) இருந்த நிலையில், 2024-ல் 42 சதவிகிதம் அதிகரித்து 12.8 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி) உயர்ந்தது. இதில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெரும்பங்கு வகிக்கிறது.

Advertisement

Advertisement

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால், சீனாவில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித் தளம் வேறு சில நாடுகளுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், நினைத்தவகையில் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை.

ஆப்பிள் நிறுவனம், தனது சீன வாடிக்கையாளர்களை வேகமாக இழந்துவரும் நிலையில், அதனை இந்தியாவை வைத்து ஈடுசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது இந்தியா 5-ஆவது பெரிய சந்தையாக உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தித் தளத்தை இந்தியாவில் மேலும் விரிவுபடுத்தவும் தயாராகி வருகிறது.

இதன்மூலம், இந்தியாவில் வருங்காலத்தில் ஆண்டுதோறும் ஐபோன் உற்பத்தி 30 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் தற்போதைய பங்கான 14 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதத்துக்கும்மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் தயாரிப்புகளைத் தயாரிக்கும் இலக்கில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments