இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி!
கரூரில் தனது பேத்தியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.
காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சுதந்திர நாள்! கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு கடன் ரூ.2.86 லட்சம் கோடி நிலுவை!
தமிழ்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு பயனர்களின் கடன் நிலுவை இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ.2.86 லட்சம் கோடி என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல்
கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்!
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, தில்லி செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு தமிழக அரசு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
இபிஎஸ் கேள்வி!
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?
சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழா குறித்த சுற்றறிக்கையில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த தகவல் இல்லை.
குடியரசுத் தலைவர் பதக்கம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கும், 17 அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்துக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தென் மாநில முதல்வர்கள் மாநாடு!
சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.
பங்குச்சந்தைகள் சரிவு
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஆக. 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆக. 14) சவரனுக்கு ரூ. 1,440 குறைந்துள்ளது.
மன்னார்குடியில் 10 பேர் கைது!
மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.