FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 26 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

நேபாள பெரு வெள்ளம் - AP
பகிர்:
Updated On : 26 ஆகஸ்ட் 2026, 7:02 pm IST

நேபாள பெரு வெள்ளம்! 55 உடல்கள் மீட்பு - நேபாள அரசு தகவல்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 6:18 pm IST

பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்

”பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெகதான்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) பேசினார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

நேபாள வெள்ளத்தால் உ.பி., பிகாருக்கு பாதிப்பு? பிகார் முதல்வருடன் அமித் ஷா பேச்சு!

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST

விஜய் ஆட்சியின் 100 நாள்கள் எப்படி? பதிலளிக்காமல் புன்னகையுடன் கடந்து சென்ற ரஜினி!

நீண்ட அறிக்கை வெளியிட்டு செய்ய முடியாத ஒரு சலசலப்பை, ஒரு சிறு புன்னகை செய்துவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 4:03 pm IST

முதல்வர் விஜய் 2029-ல் பிரதமர் ஆவார்! ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணிப்பு?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தென்மாநிலங்களில் 60 எம்.பி.க்களுடன் நாட்டின் பிரதமர் ஆவார் என்று அவரது ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 4:03 pm IST

ஓணம் பண்டிகை! வயநாட்டில் பிரமாண்ட பூக்கோலம்! கழுகுப் பார்வையில்

ஓணம் பண்டிகை கேரள மாநிலத்திலும் கேரள மக்கள் வாழும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வயநாட்டில் மிகப் பிரமாண்ட பூக்கோலம் போடப்பட்டிருந்தது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

மேட்டூர் அணை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டூர் அணையை பாசனத்துக்காக முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 12:41 pm IST

‘பரந்தூரில் விவசாய நிலத்தை திருப்பி ஒப்படைத்திடுக’ - சண்முகம்

பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 12:40 pm IST

‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - முதல்வர் டி.கே. சிவகுமார்

கர்நாடகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்று முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 11:56 am IST

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் இயக்கம்! இன்று முதல்?

எழும்பூரிலிருந்து அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று (ஆக. 26) முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

நாட்டின் சிறந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்! அபிஜீத் தீப்கே கருத்து

நாட்டின் சிறந்த முதல்வர்களாக மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் பெயர்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

தெலங்கானாவில் கோர விபத்து: லாரி மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில், 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர்; 12 பேர் காயமடைந்தனர்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

‘பெண்களை கேலி செய்வதை நிறுத்துங்கள்’... கீர்த்தி சனோனுக்கு ராகுல் ஆதரவு!

பெண்களைக் கேலி செய்வதை நிறுத்துங்கள் என்று நடிகை கீர்த்தி சனோனுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு அந்த நகரத்தின் மேயரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஸோரான் மம்தானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்

இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஓணம் திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ - மு.க. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோடமுயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு!

கடலூர்: நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இந்தச் சம்பவத்தில் இரண்டு தலைமைக் காவலர்கள் காயமடைந்தனர்.

Updated On : 26 ஆகஸ்ட் 2026, 10:38 am IST

‘இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய மிலாது நபி வாழ்த்துகள்’ - முதல்வர் விஜய்

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments