நாடகக் கலையில் முதுகலை பட்டப்படிப்பு! முதல்முறை தமிழகத்தில் தொடக்கம்!
நாடகக் கலையை வளர்த்திடும் நோக்கில் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பு குறித்து...
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது.
இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில் தமிழக அரசு சார்பில் இப்பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு “இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்” தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது.
முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மௌன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது.
நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது.
இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ. 25,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.
முதுகலை பட்டப்படிப்பு (MTA – Master of Theatre Arts) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Postgraduate degree course in the art of theatre! Launched for the first time in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.