FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகங்கை அருகே ரசாயனப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

சிவகங்கை அருகே ரசாயனப் பொருள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...

18 செப்டம்பர் 2026, 3:27 pm IST
லாரியில் இருந்து கசிந்த டீசலை நுரை அடித்து அப்புறப்படுத்தும் தீயணைப்பு வீரர்கள். - DIN
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை - மதுரை சாலையில் ரசாயனக் கலவை ஏற்றிச்சென்ற லாரி இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏனாதி அருகே சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியின் டீசல் டேங்க் மட்டும் சேதமடைந்தது.

சாலையில் டீசல் கொட்டி பரவியதையடுத்து தீயணைப்புத் துறையினர் நுரையை அடித்து அதை அப்புறப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்கு சிவகங்கை தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நுரை அடித்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியினை மேற்கொண்டனர். இதனால் சிவகங்கை -மதுரை சாலையில் ஏனாதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisement

Advertisement

- DIN

உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு (கனிம உப்பு) காரைக்காலில் இருந்து சாத்தூருக்கு தொழிற்சாலை பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

summary

Lorry carrying chemicals overturns near Sivaganga

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments