24 மணி நேரத்தில் 8 கொலைகள்!முதல்வரைப் போல காவல்துறையும் ஓய்வில் இருக்கிறதா? கனிமொழி
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருத்து...
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கட்டணம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,
Advertisement
Advertisement
"கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் குற்றங்களின் விகிதத்தை உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு?
தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.
Eight murders in 24 hours; Is police also resting, just like the CM vijay: Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.