மதுரையில் முதல்வர் விஜய்! செய்திகள் - நேரலை
முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் இன்றைய மதுரை பயணச் செய்திகளை உடனக்குடன் அறிய தினமணியுடன் இணைந்திருங்கள்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி: 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
மதுரை விருந்தினர் மாளிகையில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதை!
மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்! முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!
ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.
வீடு திரும்பும் போதே மோதிரம்!
அரசு மருத்துவமனையில் பிரசவமாகி வீடு திரும்பும் போதே ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், திட்டம் தொடர்பாக விரிவான விளக்கவுரை ஆற்றினார்.
தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்.
சாலைவலம்
மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலைவலமான முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்று கொண்டிருக்கிறார்.
மதுரை சென்றடைந்தார் முதல்வர் விஜய்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய், மதுரை சென்றடைந்தார்.
மதுரை புறப்பட்டார் விஜய்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் விஜய், இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகிறாா். தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்வில் முதல்வா் விஜய் பங்கேற்று, முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா்.
மீனாட்சி கோயிலில் தரிசனம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு மாலை 4.30 மணி அளவில் செல்லும் முதல்வர் விஜய், சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
காந்தி அருங்காட்சியகம் திறப்பு
ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிடுகிறாா்.
ஒரு கிராம் மோதிரம்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.
2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
தாய்மாமன் தங்க மோதிரம்
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் இன்று (செப். 28) தொடங்கி வைக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.