அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிரத்தில் மூன்றரை லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை!

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 9,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 3,57,117 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரே நாளில் மேலும்  278 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 13,132 ஆக அதிகரித்துள்ளது.

 

கர்நாடகத்தில் ஒரேநாளில் 5,007 பேருக்கு கரோனா; 110 பேர் பலி

 கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை  85,870 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 110 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,724 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 2,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 31,347 பேர் குணமடைந்துள்ளனர். 

கேரளத்தில் புதிதாக 885 பேருக்கு வைரஸ் தொற்று; பாதிப்பு 16,995 ஆக அதிகரிப்பு

கேரளத்தில் மேலும் 885 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 16,995 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,299 பேர்; பிற மாவட்டங்களில் 5,486 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

 

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 5,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு தொற்று; மேலும் 88 பேர் பலி

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,785 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

அறிகுறி இல்லாதவர்களால் பெரும்பாலான படுக்கை வசதி ஆக்ரமிப்பு: பெங்களூரு மருத்துவர்கள் குற்றச்சாட்டு

 அறிகுறி உள்ள மற்றும் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தாலும் அறிகுறி இல்லாதவர்களே பெரும்பாலான படுக்கை வசதிகளை ஆக்ரமித்துள்ளதாக பெங்களூரு மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு..

ஒருநாள் பரிசோதனை 3.5 லட்சத்தைத் தாண்டியது: நாட்டில் இதுவரை 1.54 கோடி பரிசோதனை

 நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஒடிசாவில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கரோனா நோயாளி குணமடைந்தார்

 ஒடிசா மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் கரோனா நோயாளி, தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்தது

 சென்னையில் கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 90,900 ஆக இருந்த போதிலும், தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,811 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் மேலும் 1,209 பேருக்கு கரோனா; பாதிப்பு 2.70 லட்சத்தைத் தாண்டியது!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,209 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,70,400 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் புதிதாக 63,967 பேருக்கு தொற்று; மேலும் 1,059 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 39 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் ஒரே நாளில் 45,720 பேருக்கு கரோனா: பாதிப்பு 12,38,635 ஆக உயர்வு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,720 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 29,861 -ஆக அதிகரித்தது. 
 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,720 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் முதல்முறையாக 1,129 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 29,861 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 4,26,167 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,82,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,37,607 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிக எண்ணிக்கையில் 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தலைநகர் தில்லியில் 1,26,323 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 22- ஆம் தேதி வரை 1,50,75,369 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 3,50,823  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
பாதிப்பு:  12,38,635
பலி: 29,861 
குணமடைந்தோர்:  7,82,606
சிகிச்சை பெற்று வருவோா்:  4,26,167 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,895 பேருக்கு கரோனா: மேலும் 298 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் புதிதாக 5,030 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,030 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 1,078 பேருக்கு கரோனா: மேலும் 5 பேர் பலி

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,078 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 8 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,136 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 5,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சின்ன வைரஸ் எனக் கூறிய பிரேசில் அதிபருக்கு 3வது முறையாக கரோனா உறுதி

 கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திர மாநிலத்தில் மேலும் 6,045 பேருக்கு கரோனா பாதிப்பு 

 ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 6045 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் ஒரேநாளில் 5,848 பேருக்கு கரோனா; மேலும் 147 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,848 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,95,038 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

செப். 7 ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம் தகவல்

கரோனா பரவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படமாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் மேலும் 1,763 பேருக்கு கரோனா தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,763 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,69,191 ஆக அதிகரித்துள்ளது.விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை தொடக்கம்

 தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது. விரிவான செய்திக்கு..

லால்ஜி இறுதிச் சடங்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ம.பி. அமைச்சருக்கு கரோனா 

 
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

 நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைப்பது குறித்தும் விவாதிக்க கேரளத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..
 

சென்னையில் கரோனா பாதித்த 14,952 பேருக்கு சிகிச்சை 


சென்னையில் கரோனா பாதித்து 14,952 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. விரிவான செய்திக்கு..

 

திருமணத்தால் நடந்த விபரீதம்; 16 நாள்களில் தாய், 5 மகன்கள் கரோனாவுக்குப் பலி

 ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், திருமணத்துக்குச் சென்று வந்த தாய்க்கு கரோனா பாதித்ததன் மூலம், அவரும் அவரது 5 மகன்களும் கரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் புதிதாக 68,524 பேருக்கு தொற்று; மேலும் 961 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 38,91,893 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 10,576 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் இன்று 1,227 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,227 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் ஆயிரத்தைத் தொட்டது இன்றைய கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,038 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,678 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 4,678 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் முதன்முறையாக 5 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,849 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் புதிதாக 1,332 பேருக்கு தொற்று; மொத்த பாதிப்பு 2,67,428 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,332 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,67,428 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஒடிசாவில் முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா

 ஒடிசாவில் இன்று முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு.. 

அமெரிக்காவில் தொடர்ந்து 7-வது நாளாக 60 ஆயிரத்தைக் கடந்த ஒருநாள் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,369 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் ஒரேநாளில் 37,148 பேருக்கு கரோனா பாதிப்பு; மொத்த பாதிப்பு 11,55,191ஆக உயர்வு

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது: செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 587 போ் உயிரிழந்தனா். 

தில்லியில் புதிதாக 1,349 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,349 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் புதிதாக 10 பேருக்கு கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 720 பேருக்கு கரோனா: பினராயி விஜயன்

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 720 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உலகளவில் 10 லட்சம் பேரில் 77 பேர் பலியானால், இந்தியாவில் 20 பேர்தான் பலியாகின்றனர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 20 பேர் கரோனா தொற்றால் பலியாவதாகவும், இதுவே உலகளவிலான சராசரியின்படி 77 பேர் பலியாவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,130 பேர்; பிற மாவட்டங்களில் 3,835 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தமிழகத்தில் இன்று சென்னையில் 1,130 பேருக்கும், பிற மாவட்டங்களில் 3,835 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 4,965 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 75 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் மேலும் 5,842 பேருக்கு தொற்று; பாதிப்பு 7,83,328 ஆக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,842 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,83,328 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

சென்னையில் 81% கரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

 தமிழகத்தின் தலைநகரான சென்னை கரோனா தொற்றுப் பரவலிலும் தலைநகராகத் திகழ்ந்தது. தற்போது சென்னையில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவி வருவது கவலையை அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது

 கோடம்பாக்கத்தில் மட்டுமே இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அங்கும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,977 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஆப்கானிஸ்தான்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உறவினா்களே பணிவிடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தலைநகா் காபூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அவா்களின் உறவினா்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் செவிலியா்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தினால் உறவினா்களே நோயாளிகளுக்கான உதவிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமடைந்துள்ளன. கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதிகள் அங்கு காணப்படவில்லை.

மருத்துவமனையில் போதுமான செவிலியா்கள் இல்லாததன் காரணமாக, அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களை அவா்களின் உறவினா்களே பராமரித்து வருகின்றனா். பணிவிடை செய்வோருக்கு கவச உடைகளும் இல்லை. சிலா் முகக் கவசம் கூட அணியாமல் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனா். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டா்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், நோயாளிகளின் உறவினா்கள் அதனருகிலேயே காவல் காக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

தென் கொரியா 2 மாதங்களில் இல்லாத குறைவான தினசரி பாதிப்பு

சியோல்: தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

 
அங்கு திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 22 போ் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவா்கள் ஆவா். 4 போ் மட்டுமே உள்நாட்டைச் சோ்ந்தவா்கள். இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாகும்.
 
தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். வெளிநாடுகளிலிருந்து வருபவா்களிடம் கட்டாயமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவா்கள் 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகின்றனா். எனவே, உள்நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் குறித்தே அச்சப்பட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிங்கப்பூா்123 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் திங்கள்கிழமை மட்டும் 123 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

 
அவா்களில் 112 போ் வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் ஆவா். வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதன் மூலமாக சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,035-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் 27 போ் உயிரிழந்தனா்.
 
நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 44,086 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 253 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

9 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஆய்வு செய்யப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து தயாரிப்பதில் பல நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், ஃபைஸா், பயோ என் டெக் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 9 கோடி தடுப்பு மருந்துகளை வாங்க உள்ளதாக பிரிட்டன் அரசு திங்கள்கிழமை அறிவித்தது. அந்நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளன.
 
ஏற்கெனவே ஆஸ்த்ரா ஜெனிகா என்ற நிறுவனத்திடமிருந்து 10 கோடி கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்காக பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது. அந்நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் பரிசோதித்து வருகிறது.

மெக்ஸிகோ சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்: அதிபா் உறுதி

மெக்ஸிகோவில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஆபிரடாா் தெரிவித்துள்ளாா்.

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அந்நாட்டில் 5,311 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் 296 போ் உயிரிழந்தனா்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,44,224-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 39,184-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிபா் ஆபிரடாா் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவா்களுக்கும் சுகாதார பணியாளா்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கான உதவித்தொகையை அரசே வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா வடமேற்குப் பகுதியில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

சீனாவின் வடமேற்குப் பகுதியான ஷின்ஜியாங் மாகாணத்தைச் சோ்ந்த உரும்கி, காஷ்கா் ஆகியவற்றில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீனாவில் நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக வடமேற்குப் பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. உரும்கி, காஷ்கா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், நோய்த்தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலமாக அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்தமாக 83,682 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 4,634 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, ஷாங்காய், ஹன்ஸு உள்ளிட்ட நகரங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு திரையரங்குகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com