முகப்பு
செய்திகள்

‘லியோ’ படத்திற்காக வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் ஹிந்தி நடிகர்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் ஹிந்தி நடிகர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 20 பிப்ரவரி 2023, 9:16 pm IST
பகிர்:

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக அசத்தினார். லியோ படத்திலும் இணைந்துள்ளது எதிர்பார்பை அதிகரித்துள்ளது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லியோ படத்திற்காக உடற்பயிற்சி செய்துவரும் சஞ்சய் தத் விரைவில் காஷ்மீரில் இணைய உள்ளார். அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இந்தாண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments