வாத்தி வசூல் எவ்வளவு?: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வாத்தி திரைப்படத்தின் முதல் மூன்று நாள்கள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள 'வாத்தி' படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: முகநூல் பதிவு எதிரொலி: மூத்த நடிகரின் சம்பள பாக்கியை அளித்த பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்
உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் வசூல் விவரத்தினை தெரிவித்துள்ளது.
முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.