இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 30 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
காதலரை கரம் பிடித்தார் நடிகை வினுஷா தேவி!
பாரதி கண்ணம்மா நடிகை புகழ் வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை கரம்பிடித்தார். இருவருக்கும் இன்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேபாள வெள்ளத்தில் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியர்!
நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது சாதுர்யமான நடவடிக்கையால் 1643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த பலரும் ஆசிரியரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
கருப்புச் சட்டை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இன்று கருப்புச் சட்டை அணிந்தும் கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டும் 11வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போதைக் கலாசாரத்திற்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
போதைக் கலாசாரத்திற்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2029-ல் முதல்வர் விஜய்தான் பிரதமரா? காங்கிரஸ் அமைச்சர் பதில்
முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் கூறுவது தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம்" என்று தெரிவித்தார்.
காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல்
தமிழகத்துக்கான 17.604 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக திறப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்! மனைவியைப் பாராட்டிய அன்புமணி
சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் என எம்எல்ஏ சௌமியாவை பாமக தலைவர் அன்புமணி பாராட்டியுள்ளார்.
நீட் முதுநிலை தேர்வு: ஜெய்ப்பூரில் குளறுபடியால் மறுதேர்வு அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வில் குளறுபடி காரணமாக இரு தேர்வு மையங்களுக்கு மட்டும் மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!
வடமதுரை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெற்றோருடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் 4 பேர் வேன் மோதிய விபத்தில் பலியாகினர்.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இதுவரை, 68.5 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி!
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) பங்கேற்றார்.
இன்றைய ராசி பலன்கள் (30.8.2026) 12 ராசிகளுக்கும்! உற்சாகம் யாருக்கு?
12 ராசிக்கான ராசிப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு! பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று(ஆக. 30) விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் 5 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.