FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 23 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

23 ஆகஸ்ட் 2026, 6:38 pm IST
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 23 ஆகஸ்ட் 2026, 6:38 pm IST

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய முயற்சியா? காங்கிரஸ் கேள்வி

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறதா? என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 5:52 pm IST

இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 5:05 pm IST

மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

மகாராஷ்டிரத்தில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று ஏரிக்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 4:27 pm IST

ஒடிசா: பிரிந்து சென்ற மனைவிக்காக நரபலி கொடுத்தவர் கைது!

ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவிக்காக நரபலி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 3:53 pm IST

ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 900 க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளளதாக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 2:54 pm IST

அந்த விடியோவில் இருப்பது நான் இல்லை: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவிய விடியோ பற்றி விளக்கமளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டுள்ளார்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 2:47 pm IST

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:43 pm IST

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி இல்லை: தில்லி காவல்துறை

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி வழங்கப்படவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:39 pm IST

இது அரசா? சர்க்கஸ் கம்பெனியா? தவெகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி

சட்டப்பேரவைக்கு அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மக்கள் பிரச்னை பேசுவதற்காக வருவதில்லை. அவர்களுக்குத் தேவை 4 ரீல்ஸ்.

இவர்கள் சர்கார் நடத்துகிறார்களா? அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா? என்று கேட்கும் நிலையில்தான் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:39 pm IST

எம்.பி.க்களுக்கு தேவையானது இதுதான்... ஜோதிமணி கோரிக்கை

எம்.பி.க்கள் சார்பாகவும் கோரிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் எம்.பி.க்களுக்கென தனி அலுவலகம் கிடையாது. அரசு கட்டிக் கொடுத்த அலுவலகங்கள் எதுவும் கிடையாது.

ஆகையால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, மக்கள் எளிதில் வந்து செல்லும்வகையில், தமிழ்நாடு அரசு அலுவலகம் கட்டித் தர வேண்டும். எங்களுக்கு கார் எதுவும் வேண்டாம்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:25 pm IST

தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள்- அமைச்சர் ரமேஷ்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தகாத வார்த்தைகளைப் பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:24 pm IST

மும்பையில் 22 அடி உயர விநாயகர் சிலை சரிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

மும்பையில் பேரணியாகக் கொண்டுவரப்பட்ட 22 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 1:08 pm IST

பேட்மேனாக ராகுல் காந்தி: தில்லியில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்!

தில்லியில் ராகுல் காந்தியை பேட்மேனுடன் ஒப்பிட்டு போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:54 pm IST

2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

100 நாள்களை நிறைவு செய்த கருப்பு திரைப்படம்!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

அமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரவுள்ள பொருளாதாரப் போரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என ஈரான் தெரிவித்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வு

ஆவணி மாத சுபமுகூா்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடா்ந்து புதன்கிழமை ஓணம் பண்டிகை வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்து. வாழை இலையின் விலை ரூ. 10,000 வரையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

கேரள மாநிலத்தின் குருவாயூர் கோயிலில் மலையாள மாதமான சிங்கத்தின் (Chingam) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

ஒடிசாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற சரக்கு கப்பல், வங்காள விரிகுடா கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 22 பேரையும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதி சயீத்துக்கு எதிராக என்ஐஏ அழைப்பாணை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை அழைப்பாணை விடுத்துள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்

தவெகவுக்கு ஆதரவாக முதல் கடிதம் காங்கிரஸ்தான் கொடுத்தது. அதனால், தவெகவின் இன்றைய அமைச்சர்கள் அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்களெல்லாம் அமைச்சராவதற்கு காங்கிரஸின் ஆதரவு முதலில் வந்தது.

இல்லையென்றால், அமித் ஷா எல்லோரின் கதையையும் முடித்திருப்பார்: காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments