FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 28 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 ஆகஸ்ட் 2026, 12:44 pm IST

மீட்புப் பணிகள் நிறுத்தம்!

திபெத் நாட்டிலுள்ள அணை உடைந்ததால் நேபாளத்தில் மீட்புப் பணிகளை நிறுத்தி, அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

திமுகவில் 110 மாவட்டங்களாக அதிகரிப்பு!

திமுகவில் 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

மாநிலத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர்

மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என்றும், விலை உயர்வை தவெக அரசு கட்டுப்படுத்தும் என்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

கிராண்ட் செஸ் டூர்: பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 28, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,725-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

விலைவாசி உயர்வு: கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்ட உதயநிதி, இபிஎஸ்

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய்யின் பதில் மனு இன்று விசாரணை

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கில் விஜய் தரப்பு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆக. 28) விசாரிக்கவுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

தில்லி: உதவிமைய கட்டுப்பாட்டு அறையில் ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்புப் பணிகளைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, வினோத், தென்னரசு ஆகியோர் தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டுள்ளனர்.

Updated On : 28 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 500-ஐ கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments