இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 12.5 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பது பற்றி...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 12.5 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974, பிரிவு 301-இன் கீழ் உடல் உழைப்பு தொடர்புடைய பொருள்கள் இறக்குமதியைத் திறம்படக் கட்டுப்படுத்த தவறியதால், கூடுதல் வரியை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல்முறை பதவிக் காலத்தின் போது, இதே சட்டத்தைப் பயன்படுத்திதான் சீனாவுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது இந்திய இறக்குமதி பொருள்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபரிடம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை இது நடைமுறைப்படுத்தப்பட்டால், பல்வேறு வகையான பொருள்களின் இறக்குமதி கடுமையாக பாதிக்கக்கூடும். சர்வதேச வர்த்தகத்தில் மேலுமொரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த கூடுதல் வரி விதிப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா அதிகாரிகள் அளவில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி, நாளை வரை நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இத்தகைய முன்மொழிவை அமெரிக்கா வெளியிட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்தியா தவிர வேறெந்த நாடுகள்?
உடல் உழைப்பு தொடர்புடைய பொருள்கள் இறக்குமதியைத் திறம்படக் கட்டுப்படுத்த தவறிய காரணத்துக்காக இந்தியா மட்டுமின்றி, மேலும் 60 நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், வியட்நாம், வங்கதேசம், தாய்லாந்து, கனடா, பாகிஸ்தான், மெக்சிகோ மற்றும் பல அரபு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
US Plans to Impose an Additional 12.5% Tariff on Indian imports!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.