பேரவையில் 3 முக்கிய அறிவிப்புகள்: இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 24 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!
சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டம்! பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!
கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் அக். 2-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்
புது தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள தனது வீட்டில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயதுடைய கர்பிணி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ்
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும் எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு கட்டடங்களின் தகுதிக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு!
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இலவச சிலிண்டர்: பிரபல வாழைப்பழ காமெடியைக் சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்
தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடம் என்ன? அண்ணாமலை
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி!
கருப்பு நாள்! அரசியல் லாபத்திற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து! டிஆர்பி ராஜா
கன்னிப் பேச்சு என்ற வார்த்தை வேண்டாம்! பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை!
பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதி
வேவு பார்ப்பது திமுக வேலையில்லை: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
வேவு பார்ப்பது திமுக வேலையில்லை, மக்களுக்கு வேலை செய்வதே எங்கள் பாணி என்று முன்னாள் அமைச்சரும் துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு கூறியுள்ளார்.
வெங்காயம் விலை உயர்வு! பட்ஜெட்டில் விழுந்த துண்டு! மேலும் அதிகரிக்குமா?
காரீப் பருவக் காலத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததன் காரணமாக, நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாதாளச் சாக்கடை பராமரிப்பு முழுமையாக இயந்திரமயமாக்கப்படும்!
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாளசாக்கடை பராமரிப்பை முழுமையாக இயந்திரமயமாக்க ரூ.102 கோடியில் நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு இன்று (ஆக. 24) அறிவித்தது.
பள்ளிச் சீருடையுடன் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் விளையாட்டுச் சீருடை (ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி) வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆக. 24) தெரிவித்தார்.
TN-ARIVU 2027-28 ஆம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
முழு கல்விகட்டண விலக்கு
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டண விலக்கு அளிக்கப்படும்.
திருநர் மாணாக்கர்களுக்கு நிதியுதவி
உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு... தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.