FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 26 ஜூலை 2026, 8:45 pm IST
பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 26 ஜூலை 2026, 8:45 pm IST

கல்வியில் சீர்திருத்தம் உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!

கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

Updated On : 26 ஜூலை 2026, 8:44 pm IST

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை!

மேற்கு வங்கத்தில் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை 400ஐத் தாண்டும் என்பதால், புதிய சட்டப்பேரவை கட்டப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

Updated On : 26 ஜூலை 2026, 6:20 pm IST

இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றுங்கள்!

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இல்லங்கள்தோறும் தேசியக் கொடியை ஏற்றியதைப்போன்று, இந்த ஆண்டும் இல்லங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் இன்று (ஜூலை 26) வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement

Advertisement

Updated On : 26 ஜூலை 2026, 6:19 pm IST

உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகைத் தேநீர்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தயாரிக்கும் மூலிகைத் தேநீர் உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

மான்கிபாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச பெண்கள் தயாரித்து விற்பனை செய்துவரும் மூலிகைத் தேநீர் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

Updated On : 26 ஜூலை 2026, 6:19 pm IST

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்

தில்லியில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை மூலம் தடியடி நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

Updated On : 26 ஜூலை 2026, 6:06 pm IST

36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

தில்லியில் 36 நாள்களாக போராட்டமும் முழக்கமும் என்றிருந்த ஜந்தர் மந்தரில், போராட்டம் முடிவுற்றதால் இன்று அப்பகுதி மீண்டும் அமைதி நிலைமைக்குத் திரும்பியது.

Updated On : 26 ஜூலை 2026, 6:06 pm IST

போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு நாளை (ஜூலை 27) விசாரிக்கவுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 5:19 pm IST

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 5:00 pm IST

பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற 27-வது கார்கில் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியவை.

Updated On : 26 ஜூலை 2026, 4:21 pm IST

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி!

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 4:20 pm IST

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 4:19 pm IST

தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய தனியார் விமானம் புறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 3:15 pm IST

மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்

மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் கடந்த ஒன்றரை மாதமாக பல கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறார். மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்றால் என்னவென்றே தெரியாது. உதயநிதியிடம் மேக்கேதாட்டில் என்ன பிரச்னை என்று கேளுங்கள். அறிக்கை வெளியிடுவது மட்டுமே மு.க. ஸ்டாலினின் வேலை: அமைச்சர் நிர்மல் குமார்

Updated On : 26 ஜூலை 2026, 3:13 pm IST

சாலைத் தடுப்பில் மோதி இரண்டாகப் பிளந்த பேருந்து: ஒருவர் பலி; 26 பேர் காயம்

கேரளத்தில் திருச்சூரிலிருந்து கோழிக்கோடு நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மேலும், 26 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 26 ஜூலை 2026, 1:38 pm IST

திமுகவை வழிநடத்த யாருக்குத் தகுதி உள்ளது? உதயநிதியா? கனிமொழியா? நிர்மல் குமார் கேள்வி

திமுகவை வழிநடத்த கனிமொழிக்கு தகுதி உள்ளதா? அல்லது உதயநிதிக்கு தகுதி உள்ளதா? என கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு நடத்தட்டும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 1:37 pm IST

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் உள்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 1:37 pm IST

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யார் ஒப்புதல் அளித்தது எனக் கேள்வியெழுப்பி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 1:24 pm IST

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!

மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) பொறுப்பேற்றுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 12:53 pm IST

சேலம் மாவட்டத்துக்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 12:48 pm IST

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

சீமான், சரத்குமார் என அனைவரும் இப்போது ஒரே மேடையில் இருப்பதைபோல, இரண்டு மாதங்களுக்கு முன்னால் இருந்திருந்தால், தமிழகத்தின் நிலைமையே மாறியிருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

மேக்கேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக - தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் தொடர்பான தகவல்களை ஈரானுக்கு ரஷியா வழங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 11:08 am IST

ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்!

பாமக தலைவா் மருத்துவா் ராமதாஸின் மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் ஆகியோா் என்.ஆா்.காங்கிரஸில் விரைவில் இணையவுள்ளனா். இதற்கு முன்னோட்டமாக அவா்கள் இருவரும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து திருநீறு பூசி வாழ்த்து பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments