இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
புதிதாகத் தொடங்கப்பட்ட இ20 மக்கள் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை இன்று (ஜூலை 27) 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபி
கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் இறங்க நேரிடும் என சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையினை வழங்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிந்துகொள்வது எப்படி? பயன்கள் என்னென்ன?
வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கையை இனி அட்மினால் பார்க்கக் கூடிய வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
சிறிய குடும்பங்களைக் கவரும் ரியல்மி குளிர் சாதனப் பெட்டி!
ரியல்மி நிறுவனத்தில் புதிதாக குளிர் சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய குடும்பத்தினர், திருமணமாகாதவர்கள் (பேச்சிலர்ஸ்) இலக்காகக் கொண்டு சிறிய அளவில் இவை தயாரிக்கப்படுகின்றன.
பட்ஜெட் விலையில் ஹையர் மைக்ரோவேவ் ஓவன்!
குறைந்த அளவிலான மின்பயன்பாட்டைக் கொண்டுள்ள வகையில் புதிய மைக்ரோவேவ் ஓவனை ஹையர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் என். ஆனந்த்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேட்டில் இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்?
சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆறுகளை தூர்வாறும் பணியை அமைச்சர் என். ஆனந்த் இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.
அமெரிக்காவின் சியாட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து: 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!
பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு...
பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார் உதயநிதி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!
சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்
ஹரியாணாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கை
சகாயம் ஐஏஎஸ் -க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி கண்டனம்
போராட்டங்களின்போது காவல்துறை மேற்கொள்ளும் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இணையத்தில் ஜன நாயகன் பார்த்தவருக்கு முன்ஜாமீன்!
திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜன நாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த அனுமதி
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காமன்வென்ல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அமளி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
ராகுல் கண்டனம்
பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)
வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.