FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 28 ஜூலை 2026, 10:28 pm IST
நாடாளுமன்றம் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:
Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

பிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை

போராட்டம் நடத்திய பிகார், அசாம் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அந்த மாநில அரசுகள் உறுதியளித்துள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான நேற்று இந்தியா 1 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யகோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வருகின்றன.

Advertisement

Advertisement

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா

நீட் தேர்வு ரத்து குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. அவசர விவாதத்திற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் ஸ்பீக்கர் ஒலியுடன் செல்போன் பயன்படுத்தக் கூடாது, சக பயணிகளுக்கு இடையூறு செய்யும்வகையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 28)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 28) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்துள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!

நாடு முழுவதும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

பெண்களிடம் வினோத மோசடி! மொட்டை அடித்தால் ரூ. 45 ஆயிரம் பணம்!

ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால ரூ. 15 ஆயிரம் தருவதாகக் கூறி, பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 28 ஜூலை 2026, 11:13 am IST

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 11:29 am IST

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்

Updated On : 28 ஜூலை 2026, 11:41 am IST

நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து 7-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

Updated On : 28 ஜூலை 2026, 11:41 am IST

போலி போலீஸ் கைது

தமிழ்நாடு முழுவதும் போலீஸ் எனக் கூறி, இளைஞர்கள், இளம்பெண்களைக் குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 11:43 am IST

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார்.

Updated On : 28 ஜூலை 2026, 12:32 pm IST

நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

Updated On : 28 ஜூலை 2026, 4:44 pm IST

தவறுதலாக நடந்துவிட்டது! மோடி விடியோ பிளாக் செய்யப்பட்டது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஜென்ஸி தலைமுறையினருக்கு பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி விடியோ, தவறுதலாக பிளாக் செய்யப்பட்டுவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 4:45 pm IST

இரவு முழுவதும் அடித்து வீட்டை விட்டு துரத்தினர்! இன்று காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் ஷர்மிளா தன்கர்!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கும் ஷர்மிளா தன்கர், வீட்டில் நடக்கும் வன்கொடுமைக்கு ஆளாகி, முதல் கணவரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு, விளையாட்டு பயிற்சியின் முதன்முறையாக தன்னுடைய 34 வயதில் தொடங்கியிருக்கிறார்.

Updated On : 28 ஜூலை 2026, 4:45 pm IST

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் தெற்கு பகுதிகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 5:32 pm IST

ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்

இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 5:32 pm IST

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 5:45 pm IST

நீட் போராட்டம்: காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!

கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக் குற்றம் சாட்டி காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 7:43 pm IST

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்: சோனம் வாங்சுக் மனைவி பேச்சு

சமஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் மனதில் காலனித்துவ நீக்கம் என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உடனான கலந்துரையாடலில் கீதாஞ்சலி இவ்வாறு தெரிவித்தார்.

Updated On : 28 ஜூலை 2026, 7:46 pm IST

நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்

நீட் போராடத்தில் கேரளத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பினராயி விஜயனின் கடிதத்தை அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 9:26 pm IST

கங்கனாவின் பேச்சை பாஜகவே பொருட்படுத்தாது! நாங்கள் ஏன்? சிஜேபி

பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்தின் பேச்சை அக்கட்சியே பொருட்படுத்தாது என்றும் அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் எனவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் தாஸ் இன்று (ஜூலை 28) தெரிவித்தார்.

Updated On : 28 ஜூலை 2026, 9:26 pm IST

ஜென் ஸீ இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!

ஜென் ஸி தலைமுறை இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் இன்று (ஜூலை 28) தெரிவித்தார்.

Updated On : 28 ஜூலை 2026, 9:48 pm IST

நீட் போராட்ட வழக்கு ரத்து; மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

நீட் போராட்டம் தொடர்பான வழக்குகள் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜூலை 2026, 10:28 pm IST

வருகைப் பதிவில் புதிய முயற்சி! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு

தில்லியில் சொந்தமாக மாணவர்கள் வருகைப் பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியையின் தனிப்பட்ட முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments