இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 16 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு வரவேண்டும்: ஆதவ் அர்ஜுனா
சர்வதேச அளவிலான விளையாட்டுத் திடல்களை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வருவதே முதல்வரின் நோக்கம். இந்தியாவின் விளையாட்டுத் துறையில் தலைநகரம் என்றால், தமிழ்நாடுதான் என்ற நிலை வர வேண்டும். கிராமப்புறங்களில் விளையாட்டைக் கொண்டுசேர்த்தால், வருங்காலங்களில் சாதி என்ற ஒன்றே இருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பது குறித்து மத்திய அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, அமைச்சர் ஸ்ரீநாத் ஆக. 18-ல் தில்லி செல்கிறார்.
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: ரூ. 1 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்!
கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீட்டை கர்நாடக அரசிடமிருந்து முதல்வர் விஜய் பெற்றுத்தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பள்ளி முதல்வரின் மதுப்பழக்கம்; போராட்டத்தில் இறங்குவேன்: அபிஜீத் தீப்கே
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் அந்தப் பள்ளியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் இறங்குவேன் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் முகத்துவாரத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்! மீனவர்கள் சாலை மறியல்
கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால், மீன்கள் இறப்பதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தாழங்குப்பம் - எண்ணூர் விரைவுச் சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.
ஆவணி மாதத்தின் முதல் நாளான (மலையாள புத்தாண்டின் முதல் நாள்) ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்காக கோயில் நடை திறக்கப்படும்.
காங்கிரஸ் அடிமையாக மாறிய விஜய், பாஜக அடிமையாகவும் மாறுவார்: திமுக
காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதனைத்தான் விஜய் செய்கிறார். அவர் காங்கிரஸின் அடிமையாக மாறிவிட்டார். காலப்போக்கில் அவர் பாஜகவின் அடிமையாகவும் மாறுவார்: திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 12,000 கன அடி நீர் திறப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா நேர்காணல்: குழந்தைகளும் கட்டாயம் நேரில் வர வேண்டும்!
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புகளால் அமெரிக்க விசா நேர்காணலுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கேஒய்சி அவகாசம் நீட்டிப்பு!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பாஜகவினர் போராட்டம்! நயினாரும் அன்புமணியும் எங்கே போனீர்கள்? காங்கிரஸ் கேள்வி
கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராகப் போராடும் கர்நாடக பாஜகவினரை தமிழக பாஜக தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதிர்த்துக் குரல் கொடுப்பார்களா என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன், ராகுலின் உருவ பொம்மைகள் எரித்துப் போராட்டம் நடத்தப்படும்!
ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், “முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திரிணமூல் காங். அலுவலகத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை
மேற்கு வங்கத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் டிகிரி காபி உள்ளிட்ட 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு விண்ணப்பம்!
கும்பகோணம் டிகிரி காபி உள்ளிட்ட 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசின் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக விண்ணப்பித்துள்ளது.
யுஜிசி - நெட் தேர்வு: விடைக்குறிப்பு இன்று வெளியாகிறது!
யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4,500 கன அடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் அடிமையாக மாறிய விஜய், பாஜக அடிமையாகவும் மாறுவார்: திமுக
காங்கிரஸ் கட்சியின் அடிமையாக முதல்வர் விஜய் மாறிவிட்டதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.