சிஜேபி போராட்டம்! - செய்திகள் நேரலை!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ஜந்தர் - மந்தரில் சிஜேபி நடத்தவிருக்கும் போராட்டம் குறித்த செய்திகள் உடனுக்குடன்...
தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடல்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் காரணமாக தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்: ராகுல் காந்தி
இந்திய இளைஞர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அபிஜீத் தீப்கே பாட்டி மறைவு; இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை விடுவிக்க வேண்டும்: சிஜேபி கோரிக்கை!
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் பாட்டி மறைந்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை விடுவிக்க வேண்டும் என சிஜேபி கோரிக்கை வைத்துள்ளது.
Advertisement
Advertisement
சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது! கனிமொழி
எங்கு தடுத்து நிறுத்தப்படுகிறீர்களோ...சிஜேபி போராட்டம் குறித்து அஜிங்கியா
ஜந்தர் - மந்தர் நோக்கி வந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சிஜேபியின் புதிய தலைவர் அஜிங்கியா தன்னுடைய முதல் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்
சிஜேபி போராட்டம்! முன்னாள் முதல்வர்கள் கேஜரிவால், மமதா, விஜயன் கைது!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்த முன்னாள் முதல்வர் கேஜரிவால், மமதா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ், பாஜகவின் கோழைத்தனம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது: கார்கே
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்த பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.
சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது!
தேர்தல் நடைமுறைகளில் மற்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி அறிவித்திருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஏராளமான இளைஞர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவசர நிலையைவிட இது மோசமானது! மோடியும் பதவி விலக வேண்டும்! கேஜரிவால்
தில்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் மூத்த தலைவர்கள் கைது!
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசு: சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
போராட்டக்காரர்களை கைது செய்ததன்மூலம், ஜனநாயகத்தின் குரல்வளையை மத்திய அரசு நெரிப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று (அக். 10) தெரிவித்துள்ளார்.
சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!
ஜந்தர் மந்தர் போராட்டத்துக்காக தில்லி வந்த அபிஜீத் தீப்கேவை விமானத்திலேயே வைத்து காவல்துறை கைது செய்தது குறித்து...
ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!
தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது இன்று (அக். 10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புது தில்லியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிப்பு
புது தில்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் தலைநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ள நிலையில் அது பற்றிய செய்திகள் உடனுக்குடன்...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.