FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இடைத்தேர்தல் அறிவிப்பு!இன்றைய செய்திகள் செப். 7 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

7 செப்டம்பர் 2026, 6:36 pm IST
முதல்வர் விஜய்.
பகிர்:
Updated On : 7 செப்டம்பர் 2026, 8:40 am IST

சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்

இன்றைய சட்டப்பேரவைத் தொடரில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 8:41 am IST

பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு!

வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மும்பையில் ஜிஎஸ்பி சேவா மண்டல் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 செப்டம்பர் 2026, 9:37 am IST

பேரவையில் மக்கள் பிரச்னைகளை முதல்வர் இன்று பேசுகிறாரா?

இன்றைய சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கவுள்ள நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசுவார் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 7 செப்டம்பர் 2026, 9:37 am IST

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைது

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். இதனையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் சின்ன அக்னியை கைது செய்தனர்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 9:44 am IST

மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2026, 10:57 am IST

ஒரு குற்றச் சம்பவத்துக்காக ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூற முடியாது: முதல்வர் பதிலுரை

"குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிட முடியாது.

தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடைபெற்று விட்டபிறகு, அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி, மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது": முதல்வர் விஜய்

Updated On : 7 செப்டம்பர் 2026, 10:57 am IST

திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்: முதல்வர்

அரை நூற்றாண்டுக்கும் கீழே ஆழமாகச் சென்று, தோண்டியெடுத்து, மக்களை ஏமாற்றுகிற அந்த போலி பிம்பத்தையும் போலி பிராண்டையும் உடைக்கப்படும் என்று எச்சரிக்கையாக அல்லாமல் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்: முதல்வர்

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:16 am IST

முதல்வர் பதிலுரைக்குப் பின் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு: திமுகவினர் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, பேரவையைவிட்டு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:17 am IST

மிஸ்ட்ர் க்ளீன் என்று சொல்லிக் கொள்பவர்களே! ஒரு மணி நேரம் பேசிய முதல்வர் விஜய்!

எதைப் பற்றி பேசினாலும் ஆதாரம் ஆதாரம் என்று கேட்பார்கள். ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு என்று பேரவையில் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:17 am IST

இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, இதுதான் திமுக. இவ்வளவுதான் திமுக என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:18 am IST

எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை ஆற்றிய முதல்வர் ஜோசப் விஜய் கூறினார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:20 am IST

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? - செப். 7 விலை நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(செப்.7) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2026, 11:21 am IST

சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்

சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2026, 12:31 pm IST

சி. விஜயபாஸ்கா் மீது பண மோசடி புகாா்

பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கு எதிரான செப். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2026, 1:09 pm IST

முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: தமிழிசை சௌந்தரராஜன்

கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்திய முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 1:43 pm IST

பரத்வாஜ் கைது... அவசர விசாரணைக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:01 pm IST

புதிய தலைமைச் செயலகம் எங்கு அமைகிறது?

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் சென்னையில் எங்கு அமையவிருக்கிறது என்பது குறித்து நாளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமயில் ஆலோசனை நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:02 pm IST

முதல்வர் உரையில் காவல்துறை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை! பிரேமலதா விஜயகாந்த்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பேரவையில் இன்று ஆற்றிய உரையில், காவல்துறை குறித்த எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை, இன்று மாலைக்குள் ஏதேனும் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கூறியிருக்கிறார்.

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:14 pm IST

அதே ஆக்டிங், பன்ச் டயலாக்; ரீல்ஸுக்காக மட்டுமே முதல்வர் பேசியுள்ளார்! உதயநிதி

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:14 pm IST

பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய தவெகவினரை கட்சியைவிட்டே நீக்கியிருக்கிறோம்! - என். ஆனந்த்

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:14 pm IST

எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு

Updated On : 7 செப்டம்பர் 2026, 4:14 pm IST

திமுக எம்எல்ஏவை கைப்பிடித்து தூக்கிவிட்ட முதல்வர் விஜய்!

Updated On : 7 செப்டம்பர் 2026, 6:04 pm IST

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அக். 6ல் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 செப்டம்பர் 2026, 6:36 pm IST

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்!

தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை (செப். 7) வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments