FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Updated On : 9 ஜூன் 2026, 10:54 pm IST
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் - டிஐபிஆர்
பகிர்:
Updated On : 9 ஜூன் 2026, 12:03 pm IST

புதுச்சேரி அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள்!

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.

Updated On : 9 ஜூன் 2026, 12:06 pm IST

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 4 ஆக குறைத்துள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:06 pm IST

அமெரிக்க நீதிபதி உத்தரவு!

புதிய ஹெச் 1-பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 9 ஜூன் 2026, 12:06 pm IST

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,040 உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:08 pm IST

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

Updated On : 9 ஜூன் 2026, 12:08 pm IST

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியது.

Updated On : 9 ஜூன் 2026, 12:08 pm IST

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை மீண்டும் தில்லி செல்லவுள்ளார்.

Updated On : 9 ஜூன் 2026, 12:11 pm IST

பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்

பருவமழை பாதிப்புகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ. 1,000 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூன் 2026, 12:11 pm IST

717 மதுக்கடைகள் மூடல்: அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு!

717 மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Updated On : 9 ஜூன் 2026, 12:11 pm IST

பண மோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி. வீணா விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:12 pm IST

மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:15 pm IST

பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

பணமோசடி வழக்குத் தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி. வீணா விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:30 pm IST

ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 9 ஜூன் 2026, 12:35 pm IST

ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல!

Updated On : 9 ஜூன் 2026, 12:35 pm IST

மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!

Updated On : 9 ஜூன் 2026, 2:20 pm IST

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை!

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூன் 2026, 2:20 pm IST

பவானி - துபைக்கு ரூ. 10,000!

பவானியில் இருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் துபை என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டதால் பயணி அதிர்ச்சி அடைந்தார்.

Updated On : 9 ஜூன் 2026, 5:40 pm IST

பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன் - விஜய்

மனதிற்கு நெருக்கமான ஒன்று. நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறினேன். அதனை உணர்வுப்பூர்வமாகத்தான் கூறினேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. சொன்னதை எல்லாம் படிப்படியாக செய்வோம். அதில் தெளிவாக இருக்கிறோம்

பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னை பெரிதானதற்கு காரணம். இதற்கு காரணம் யார் என்பதை நான் கூறி தெரியவேண்டும் என்பது இல்லை.

போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு சட்டம் - ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. ஒழுக்கத்துடன் இருந்தால் பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம்.

பயம் இல்லாமல் பெண்கள் வாழ வேண்டும் என்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நமது இலக்கு.

Updated On : 9 ஜூன் 2026, 5:52 pm IST

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு என சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

பயம் இல்லாமல் பெண்கள் வாழ வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

Updated On : 9 ஜூன் 2026, 5:53 pm IST

தனிமனித ஒழுக்கம் அவசியம்!

போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு சட்டம் - ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. ஒழுக்கத்துடன் இருந்தால் பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம்.

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

Updated On : 9 ஜூன் 2026, 6:53 pm IST

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் என்ன? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் மற்றும் அது எவ்வாறு இயங்கும் என்று லதா ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) பேட்டியளித்துள்ளார்.

Updated On : 9 ஜூன் 2026, 7:08 pm IST

10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை? பிரபல பாடகர் மீது புகார்: போலீஸார் விசாரணை

Updated On : 9 ஜூன் 2026, 8:09 pm IST

போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா

Updated On : 9 ஜூன் 2026, 8:35 pm IST

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) சோதனை செய்தனர்.

Updated On : 9 ஜூன் 2026, 9:06 pm IST

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!

Updated On : 9 ஜூன் 2026, 9:51 pm IST

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு!

Updated On : 9 ஜூன் 2026, 10:11 pm IST

40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!

கர்நாடகத்தில் 40 வயதுடைய பெண்ணிடம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 10 பேரை காவல் துறையினர் இன்று (ஜூன் 9) கைது செய்தனர். இதில் 18 வயது நிரம்பாத சிறுவனும் அடக்கம்.

கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர்கள் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Updated On : 9 ஜூன் 2026, 10:28 pm IST

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

Updated On : 9 ஜூன் 2026, 10:47 pm IST

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments