கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதன்படி 95 கடற்படை வீரர்கள் உட்பட 505 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் 120 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 68 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திம்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும் என்று மோடி கூறினார். விரிவான செய்திக்கு..
மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையும் இன்று முழு வேகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். விரிவான செய்திக்கு..
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 137 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்குக்கான வாடகைக் கட்டணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையை அறிந்துகொள்வதில் சீனாவும் அமெரிக்காவும்தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றன. விரிவான செய்திக்கு..
நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது, கரோனா பரவலைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,059ஆக உயர்ந்துள்ளது. அதில் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 777 பேருக்கு ஜோத்பூரில் 321 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து 493 பேர் குணமடைந்த நிலையில் 198 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திம்பியுள்ளனர்.
கோவண்டியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த 36 வயது பொது மருத்துவர், கரோனா பாதித்து வியாழக்கிழமை உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாகப் பேசியதை உண்மை என்று கருதி யாரும் கிருமி நாசினியைக் குடித்து விட வேண்டாம் என்று மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். விரிவான செய்திக்கு..
உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி 20,319 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..
சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஊரடங்கு கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து தில்லியில் இருந்து புறப்பட்டு 7 மாநிலங்களைக் கடந்து சுமார் 2,700 கி.மீ. தொலைவை சாலை மார்கமாகவே கடந்து கேரளம் வந்தடைந்த முதிய தம்பதியில் மூதாட்டிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நொய்டா: கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் நொய்டாவில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்துள்ளது. இதையும் சேர்த்து அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 34 ஆனது.
கொழும்பு: இலங்கையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருக்கும் நிலையில், எப்ரல் 27ம் தேதி நாடு முழுவதும் பிரப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உட்பட புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 489ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,077-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-இல் இருந்து 718 -ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...
லண்டன்: கரோனா நோய்த்தொற்று ஏற்படும் பெரும்பாலான சிறுவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் மிதமான சிகிச்சையிலேயே அவா்கள் குணமடைந்துவிடுவதாகவும் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில்தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 50,836 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,277 பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,90,719 உயர்ந்துள்ளது.
மும்பை தாராவியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தாராவியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், தில்லி மற்றும் தென் மாநிலங்களில் குணமடைவோரின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. விரிவான செய்திக்கு..
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள தாராவி பகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிர அரசும் மும்பை பெருமாநகராட்சியும் எடுத்துவரும் நடவடிக்கைகளால் அவ்வளவு எளிதில் கரோனா பரவலைத் தடுத்துவிட முடியாது என்று அஞ்சப்படுகிறது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்ருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ராஜஸ்தான் இன்று புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
குஜராத்தின் பரோடாவில் ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை, கோவை, மதுரையில் நான்கு நாள்களுக்கும் சேலம் மற்றும் திருப்பூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.