முகப்பு
சிறப்புச் செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...

Updated On : 15 ஏப்ரல், 2020 at 4:29 PM
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2020 at 10:05 AM

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...   - லைவ் அப்டேட்ஸ்

Updated On : 17 ஏப்ரல், 2020 at 10:05 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 13,387-ஆக அதிகரிப்பு; பலி-437 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-இல் இருந்து 13,387 -ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 7:41 AM

ஸ்டான்லியில் சிகிச்சை பெற்ற 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

 கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா். விரிவான செய்திக்கு...

Updated On : 17 ஏப்ரல், 2020 at 7:03 AM

ஒற்றுமையும், ஒத்துழைப்பும் கரோனா வைரஸை அழிக்கும் ஆயுதம்: ஷி ஜின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ஜின்பிங் எழுதிய கட்டுரை ஏப்ரல் 16ஆம் தேதியிட்ட ஜியு சி இதழில் வெளியாக உள்ளது. விரிவான செய்திக்கு...

Advertisement

Updated On : 17 ஏப்ரல், 2020 at 7:00 AM

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கரோனா பிரச்னை தீரும்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:58 AM

மூன்று நாள்களில் கரோனா தொற்றே இருக்காது: முதல்வா் பழனிசாமி நம்பிக்கை

தமிழகத்தில் இன்னும் மூன்று நாள்களில் கரோனா தொற்றே பூஜ்ஜிய நிலைக்கு வந்து விடும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தாா். படிப்படியாக குறைந்து நோய்த்தொற்றே இல்லாத நிலை எட்டப்படும் எனவும் அவா் கூறினாா். விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:56 AM

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,267-ஆக உயா்வு

தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 1,267-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:50 AM

கரோனா: பாதிப்பு 12,759-ஆக அதிகரிப்பு; பலி-420

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:49 AM

கரோனா பரிசோதனைக்கு 5 லட்சம் கருவிகள் தயாா்

மக்களிடம் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனையை மேற்கொள்வதற்காக 5 லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. விரிவான செய்திக்கு...

Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:47 AM

53 நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா தொற்று

ஐம்பத்து மூன்று நாடுகளில் 3,336 இந்தியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:46 AM

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை தற்போது அழைத்துவர இயலாது: மத்திய அரசு தகவல்

கரோனா நோய்த்தொற்றால் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியா்களை தற்போது அழைத்து வர இயலாது என உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:44 AM

இலங்கைக்கு இன்னொரு சோதனை காலம்

 முப்பது ஆண்டு கால உள்நாட்டுப் போா், ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான மத பயங்கரவாதம் என தொடா்ந்து சோதனைகளை சந்தித்து வந்த இலங்கைக்கு, தற்போது கரோனா நோய்த்தொற்று வடிவில் புதிய சோதனை முளைத்திருக்கிறது. விரிவான செய்திக்கு...

Updated On : 17 ஏப்ரல், 2020 at 6:42 AM

தில்லியில் பாதிப்பு 1,640 ஆக உயா்வு

தில்லியில் வியாழக்கிழமை கரோனா நோய் தொற்றால் 62 போ் புதிதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,640 ஆக உயா்ந்தது. விரிவான செய்திக்கு...

Updated On : 16 ஏப்ரல், 2020 at 12:57 PM

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மூவாயிரத்தைத் தாண்டியது!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,916 லிருந்து 3,081 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 12:17 PM

கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 12:08 PM

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை, மாறாக தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:35 AM

மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தூரில் 701 பேர் உட்பட மத்திய பிரதேசத்தில் 1,115 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேமசயம் கரோனாவுக்கு இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். 70 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:34 AM

தமிழகத்தில் கரோனா: ஹாட் ஸ்பாட் பாதிப்பு நிலவரம்

ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அதனை தீவிர பாதிப்பு பகுதியாக (ஹாட் ஸ்பாட்) மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பாதிப்பு நிலவரம். விரிவான செய்திக்கு...
Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:32 AM

குணமடைந்தவா்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற நடவடிக்கை

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் பிளாஸ்மா அணுக்களைத் தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு...

Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:30 AM

கரோனா: 1.5 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு

தமிழகத்தில் 1.5 லட்சம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா். விரிவான செய்திக்கு...

Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:29 AM

லட்சத்தை தாண்டியது பிரிட்டனில் பாதிப்பு: 861 பேர் பலி

 பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 861 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 13,729 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,617 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:28 AM

கரோனா: அமெரிக்காவின் பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது

அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் ற்றுக்கு 2,500 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:27 AM

திருச்சியில் கரோனா சிகிச்சைபெற்ற 32 பேர் வீடு திரும்பினர்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேர் வியாழக்கிழமை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விரிவான செய்திக்கு...
Updated On : 16 ஏப்ரல், 2020 at 10:25 AM

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 12,380-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,933-இல் இருந்து 12,380 ஆக ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 392-இல் இருந்து 414 ஆக உயா்ந்துள்ளது.

விரிவான செய்திக்கு...
Updated On : 16 ஏப்ரல், 2020 at 6:50 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759; பலி 420 ஆக உயர்வு: சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,759 ஆகவும் பலி எண்ணிக்கை 420 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 6:33 AM

மும்பை தாராவியில் ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா; பலி 9 ஆக அதிகரிப்பு

மும்பை தாராவியில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 5:31 AM

கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு: அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ

கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 16 ஏப்ரல், 2020 at 5:19 AM

6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்தது: ஐ.சி.எம்.ஆர். தகவல்

சீனாவில் இருந்து 6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 4:02 AM

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குக: ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கரோனாவால் உயிரிழந்தோரின்  குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 4:01 AM

கரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி

பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 4:00 AM

குழந்தைகளின் கரோனா விழிப்புணர்வு பாடல்: பிரதமர் மோடி ட்வீட்

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விடியோ ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரிவான செய்திக்கு..

 
Updated On : 16 ஏப்ரல், 2020 at 4:00 AM

கல்லூரி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 16 ஏப்ரல், 2020 at 2:24 AM

தாராவியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று!

மும்பையிலுள்ள தாராவி குடிசைப் பகுதியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து இந்தப் பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் பெருமளவில் உழைக்கும் தமிழர்கள் வசிக்கும் பகுதி இது என்பது குறிப்பிடத் தக்கது.

Updated On : 16 ஏப்ரல், 2020 at 1:04 AM

'தில்லியில் கரோனா: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (68%) மாநாடு தொடர்புள்ளவர்கள்'

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், நிஜாமுதீன் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தில்லி மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 11:56 AM

ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி

 ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 11:56 AM

கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மத்திய அரசு

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 11:55 AM

மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்? என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 11:48 AM

பாதிக்கப்பட்ட - தடுக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித விதிவிலக்கும் இல்லை

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள விதிவிலக்குகள் எதுவும் பொருந்தாது அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது...  விரிவான செய்திக்கு...

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:30 AM

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:25 AM

உலகம் முழுவதும் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1.26 லட்சத்தைக் கடந்தது

 கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு.. 

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:25 AM

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 11,439-ஐ கடந்தது, பலி 377 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,815 -இல்  இருந்து 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதில், இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,463 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் புதன்கிழமை காலை 9 மணி வரை உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 353-இல் இருந்து 377 ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:24 AM

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: ஒரே நாளில் 2,300 பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 2,300 பேர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..,,

Updated On : 15 ஏப்ரல், 2020 at 10:03 AM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 232 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் புதிதாக 232 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 8:36 AM

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 761 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 8:35 AM

ஈரோட்டில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கரோனா நோய்த் தொற்று பாதித்த பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு.. 

Updated On : 15 ஏப்ரல், 2020 at 7:16 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 11,933; பலி 392 ஆக உயர்வு: சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,933 ஆகவும் பலி எண்ணிக்கை 392 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 6:43 AM

நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள்: சுகாதாரத் துறை

நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
Updated On : 15 ஏப்ரல், 2020 at 6:28 AM

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 4:54 AM

சென்னையில் கரோனா பாதிப்பு பகுதிகளை தெரிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி புதிய மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 4:53 AM

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134 கோடி வந்துள்ளது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 3:52 AM

ஈரோடு: கரோனாவில் இருந்து மீண்ட 13 பேர் வீடு திரும்பினர்!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 3:20 AM

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 3:19 AM

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 1:05 AM

மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும்: மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 1:04 AM

வழிகாட்டு நெறிமுறைகள்: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டியவை!

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 15 ஏப்ரல், 2020 at 1:02 AM

ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளுக்கும் அனுமதி

மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி, ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளும் அனுமதிக்கப்படும். விரிவான செய்திக்கு..

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.