முகப்பு
சிறப்புச் செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்

Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:49 AM
பகிர்:
Updated On : 27 ஏப்ரல், 2020 at 8:20 AM

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

Updated On : 27 ஏப்ரல், 2020 at 8:20 AM

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது

இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதன்படி 95 கடற்படை வீரர்கள் உட்பட 505 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் 120 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

 
 
Updated On : 26 ஏப்ரல், 2020 at 12:44 PM

ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 103ஆக உயர்வு

 ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 68 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திம்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர். 

Advertisement

 
Updated On : 26 ஏப்ரல், 2020 at 12:28 PM

கரோனா பாதிப்பில் இருந்து மீள இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திப்போம்: பிரதமர் மோடி

கரோனா பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும் என்று மோடி கூறினார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 11:42 AM

மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு துறையும் இன்று முழு வேகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 11:27 AM

கரோனாவுக்கு எதிரான மக்களின் போர் நிச்சயம் வெற்றி பெறும்: பிரதமர் மோடி உரை

 கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 11:09 AM

ராயபுரத்தில் அதிகபட்சமாக 137 பேருக்கு கரோனா: சென்னையில் மண்டலவாரியாக நிலவரம்

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 137 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 10:58 AM

விவசாயிகளுக்கு மேலும் ஒருமாத காலம் சலுகை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

 விவசாய விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் சேமிப்புக் கிடங்குக்கான வாடகைக் கட்டணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 10:30 AM

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 413 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 7:27 AM

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 6:49 AM

கரோனா பாதிப்பு: மாவட்டவாரியான பட்டியல்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மாவட்டவாரியான பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 
Updated On : 26 ஏப்ரல், 2020 at 6:17 AM

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 6:14 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,917; பலி 826 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 5:18 AM

வட கொரிய அதிபர் கிம் இறந்துவிட்டாரா, அறியத் துடிக்கும் சீனா, அமெரிக்கா

 வட கொரிய அதி உயர் தலைவரான கிம் ஜோங் உன் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையை அறிந்துகொள்வதில்  சீனாவும் அமெரிக்காவும்தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றன. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 4:47 AM

நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா வைரஸ் பரிசோதனைகள் தேவை: ராகுல் காந்தி

 நாளொன்றுக்கு 1 லட்சம் கரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 4:04 AM

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 811 பேருக்கு தொற்று; 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை

 மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 3:55 AM

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 288 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 3:14 AM

உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு

கரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 26 ஏப்ரல், 2020 at 2:47 AM

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது: கேஜரிவால்

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது, கரோனா பரவலைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 12:41 PM

ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது

 ராஜஸ்தானில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,059ஆக உயர்ந்துள்ளது. அதில் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 777 பேருக்கு ஜோத்பூரில் 321 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து 493 பேர் குணமடைந்த நிலையில் 198 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திம்பியுள்ளனர். 

Updated On : 25 ஏப்ரல், 2020 at 11:35 AM

மும்பையில் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணயித்த 36 வயது மருத்துவருக்கு கரோனா

 கோவண்டியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த 36 வயது பொது மருத்துவர், கரோனா பாதித்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.  விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 11:34 AM

கிருமி நாசினியை யாரும் குடித்துவிடாதீர்கள்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாகப் பேசியதை உண்மை என்று கருதி யாரும் கிருமி நாசினியைக் குடித்து விட வேண்டாம் என்று மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
Updated On : 25 ஏப்ரல், 2020 at 10:24 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைக் கடந்ததுடதாண்டியது பலி 775 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு 775 பேர் பலியாகியுள்ளனர். 
Updated On : 25 ஏப்ரல், 2020 at 10:13 AM

உலகளவில் 2 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 10:12 AM

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கேரளத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 9:58 AM

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உலக அளவில் இதுவரை 28,30,082-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,97,246-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Updated On : 25 ஏப்ரல், 2020 at 9:57 AM

கரோனாவை ஒழிக்க ஊசி மூலம் கிருமி நாசினியா?: டிரம்ப் கருத்தால் பெரும் சர்ச்சை

 
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் உடலில் கிருமி நாசினிகளை ஊசி மூலம் செலுத்தியும் புறஊதா கதிா்களை உட்புகுத்தியும் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Updated On : 25 ஏப்ரல், 2020 at 8:37 AM

பிரிட்டனில் 20 ஆயிரத்தைத் தாண்டியது பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி 20,319 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 8:36 AM

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 378 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 378 பேர் பலியாகியிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 7:53 AM

சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு பாதிப்பு: மாவட்டவாரியான பட்டியல்

சென்னையில் மட்டும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 6:22 AM

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:42 AM

தில்லியில் இருந்து 7 மாநிலங்கள், 2,700 கி.மீ. கடந்து கேரளம் வந்த முதிய தம்பதியில் ஒருவருக்கு கரோனா

 ஊரடங்கு கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து தில்லியில் இருந்து புறப்பட்டு 7 மாநிலங்களைக் கடந்து சுமார் 2,700 கி.மீ. தொலைவை சாலை மார்கமாகவே கடந்து கேரளம் வந்தடைந்த முதிய தம்பதியில் மூதாட்டிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:40 AM

109 நோயாளிகள்.. நொய்டா மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்தது

 நொய்டா: கரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் நொய்டாவில் மேலும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி இணைந்துள்ளது. இதையும் சேர்த்து அங்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 34 ஆனது.

 
Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:40 AM

கரோனா பரவினாலும் ஏப்ரல் 27-ல் ஊரடங்கு தளர்வு: இலங்கை

 கொழும்பு: இலங்கையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருக்கும் நிலையில், எப்ரல் 27ம் தேதி நாடு முழுவதும் பிரப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:39 AM

முழு ஊரடங்கு: சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்

 சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு.. 

Updated On : 25 ஏப்ரல், 2020 at 4:19 AM

மகாராஷ்டிரத்தில் 24 மணி நேரத்தில் 394 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 25 ஏப்ரல், 2020 at 3:50 AM

கர்நாடகத்தில் பத்திரிகையாளருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 489ஆக உயர்வு

 கர்நாடகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உட்பட புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக பெங்களூருவில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 489ஆக உயர்ந்துள்ளது. 

 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:44 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,077-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-இல் இருந்து 718 -ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:42 AM

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 2,292 பேர் பலியாகினர். இதனால் அங்கு நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,243 -ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க வாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு...
Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:41 AM

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் மூதாட்டி ஒருவர் பலி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதான மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  விரிவான செய்திக்கு...
 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:27 AM

சிறுவா்களுக்கு கரோனா தொற்று: அறிகுறிகளும் சிகிச்சைப் பலன்களும்

 லண்டன்: கரோனா நோய்த்தொற்று ஏற்படும் பெரும்பாலான சிறுவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் மிதமான சிகிச்சையிலேயே அவா்கள் குணமடைந்துவிடுவதாகவும் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:25 AM

அரசு அலுவலகங்கள் 33% ஊழியா்களுடன் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

 மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:25 AM

அரசு அலுவலகங்கள் 33% ஊழியா்களுடன் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

 மத்திய, மாநில அரசுகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 10:23 AM

உலக அளவில் கரோனா பலி 2 லட்சத்தை நெருங்குகிறது

உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 24 ஏப்ரல், 2020 at 9:48 AM

கரோனா: கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 600 பேரும், பிரிட்டனில் 768 பேரும் பலி

கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில்தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 50,836 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,277 பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,90,719 உயர்ந்துள்ளது. 

Updated On : 24 ஏப்ரல், 2020 at 8:56 AM

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 6 பேருக்கு கரோனா

மும்பை தாராவியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தாராவியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உள்ளது. 

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:35 AM

சென்னையில் 452 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக நிலவரம்

 அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 452  ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:15 AM

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,755 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:03 AM

கரோனாவில் இருந்து மீள்வதில் அசத்தும் தில்லியும், தென் மாநிலங்களும்

 புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், தில்லி மற்றும் தென் மாநிலங்களில் குணமடைவோரின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:02 AM

ஊரடங்கு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் கரோனா பாதிப்பு 73,000 தொட்டிருக்கும்: நீதி ஆயோக் உறுப்பினர்

 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 6:02 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,452 ஆக உயர்வு: சுகாதாரத் துறை

 இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 5:19 AM

கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை

 கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:47 AM

அதிகரிக்கும் கரோனா நோயாளிகள் - திணறுகிறது தமிழர்கள் நிறைந்த தாராவி

இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பிலுள்ள தாராவி பகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிர அரசும் மும்பை பெருமாநகராட்சியும் எடுத்துவரும் நடவடிக்கைகளால் அவ்வளவு எளிதில் கரோனா பரவலைத் தடுத்துவிட முடியாது என்று அஞ்சப்படுகிறது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:45 AM

தில்லி விமான நிலையத்தில் பணியாற்றிய சிஐஎஸ்எஃப் காவலருக்கு கரோனா

 புது தில்லி: புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்ருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜாரில் சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:45 AM

ஆவடி மாநகராட்சியின் 29வது வார்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியின் 29வது வார்டில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வீடு இருப்பதால் இந்த வார்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆவடியில் சாலையோர காய்கறி கடைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாகவும், நடமாடும் காய்கறி கடைகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:34 AM

நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியது

 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பாதிப்பு 100 ஐ எட்டியுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 4:33 AM

கரோனா ஆய்வு: மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னை வருகை

 சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:56 AM

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது

ராஜஸ்தான் இன்று புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:45 AM

கோவையில் மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

 கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:44 AM

எய்ம்ஸ் செவிலியருக்கு கரோனா: 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு.. 

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:35 AM

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது!

 ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:07 AM

ஒரே ஏடிஎம்-இல் பணம் எடுத்த ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா உறுதி

குஜராத்தின் பரோடாவில் ராணுவ வீரர்கள் மூவருக்கு கரோனா கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 3:06 AM

ராயபுரத்தில் 118 பேருக்கு கரோனா; சென்னையில் மண்டலவாரியாக நிலவரம்

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 24 ஏப்ரல், 2020 at 2:10 AM

சென்னை, கோவை, மதுரையில் நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு

சென்னை, கோவை, மதுரையில் நான்கு நாள்களுக்கும் சேலம் மற்றும் திருப்பூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.