FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் செப். 1 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

21 வினாடிகள் முன்பு
மேட்டூர் செல்லும் முதல்வர் விஜய்
பகிர்:
Updated On : 1 செப்டம்பர் 2026, 9:25 pm IST

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவு - சிபிஎம்

ஸ்டெர்லை துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் திமுகவும் தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 8:11 pm IST

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு!

ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் 1.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகமாகும்.

எனினும் கடந்த மாத ஜிஎஸ்டி வருவாய் உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும். கடந்த ஜூலையில் 2.11 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Updated On : 1 செப்டம்பர் 2026, 8:10 pm IST

24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 8:10 pm IST

எம்.எல்.ஏ. பதவி ராஜிநாமாவை திரும்பப் பெற இசக்கி சுப்பையா கடிதம்!

எம்எல்ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 7:38 pm IST

முதல்வர் விஜய் பிரதமர் ஆவாரா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்!

முதல்வர் விஜய் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செவ்வாய்க்கிழமை (செப். 1) பதில் அளித்தார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 5:43 pm IST

நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கே

நீட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்குமான வெற்றி என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் (சிஜேபி) அபிஜீத் தீப்கே இன்று (செப். 1) தெரிவித்தார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 4:18 pm IST

முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்துச் சென்ற பாட்டி! விஜய் கொடுத்த கண்ணாடி விலை இவ்வளவா?

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 4:17 pm IST

டிரம்புக்கு பதில் விஜய் கூட அமெரிக்க அதிபராகலாம்! இபிஎஸ் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்புக்கு பதில் முதல்வர் விஜய்கூட அமெரிக்க அதிபராகலாம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 2:14 pm IST

லண்டன் சாலைகளில் த்ரிஷா! விடியோ வெளியிட்ட ரசிகர்கள்! தவெக தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் என்ன?

லண்டனின் சைனாடவுன் சாலைகளில் தன்னுடைய விடுமுறை நாள்களை மகிழ்ச்சியோடு செலவிட்டுவரும் நடிகை த்ரிஷாவின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 12:32 pm IST

அதிமுகவும் நாமும் ஒன்றுதானே: பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

அதிமுகவும் நாமும் ஒன்றுதான் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 12:32 pm IST

புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ்

கோயில்களுக்குள் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசியை எடுத்துச் செல்லத் தடையில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 செப்டம்பர் 2026, 11:47 am IST

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

Updated On : 1 செப்டம்பர் 2026, 11:47 am IST

சேலம் மேச்சேரியில் திறந்த வேனில் முதல்வர் விஜய் சாலை வலம்!

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 1) சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,15,080-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,385-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ரூ. 255-க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

மேட்டூர் அணை திறப்பு: சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

மேட்டூர் அணை திறப்பையொட்டி சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

ஓய்வெடுக்கவோ திருமணங்கள் நடத்தவோ வெளிநாடுகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

சுதேசி கொள்கையை நாம் ஏற்க வேண்டும். ஓய்வெடுப்பதற்கோ திருமணங்களை நடத்துவதற்காகவோ வெளிநாடுகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். திருமணங்கள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும். தேவைகள் இல்லாதபட்சத்தில், தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

52 கோயில்களில் இன்று முதல் கைப்பேசிக்கு தடை! லாக்கரில் வைக்க ரூ. 5 கட்டணம்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இன்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் வாழ்த்து!

தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்: பூலித்தேவன் பிறந்த நாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ. 957.50-க்கு அதே விலையில் தொடர்கிறது.

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்? ஏன்?

முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப். 10-ல் பிரிட்டன் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 1 செப்டம்பர் 2026, 10:19 am IST

உஷார்!! முதல்வர் விஜய்யின் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

மத்திய பிரதேசத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் அறக்கட்டளையில் இருந்து பேசுவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments