
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்... - லைவ் அப்டேட்ஸ்
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேமசயம் பலியானோரின் எண்ணிக்கை 519-லிருந்து 543-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,302-லிருந்து 2,547-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,39,239 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 99 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அந்த உதவி ஆய்வாளர் ஊரடங்கில் பாரிமுனை பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,792ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 488-லிருந்து 506-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,015-லிருந்து 2,231-ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
பெங்களூருவில் மருத்துவமனையைத்தேடி 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த பெண்ணுக்கு ஒரு பல் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. விரிவான செய்திக்கு..
ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் குறித்த தரவு மேம்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,334 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ராஜஸ்தான் இன்று புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த் தொற்றால் உலகமே அலறிக் கொண்டிருக்கும் நிலையில் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம்கூட நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய தலைவர்களில் ஒருவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன். விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் கடந்த ஒரு வாரமாக தனது முகப்புப் பக்கத்தில் கவனஈர்ப்புச் சித்திரங்களை (டூடுல்) வெளியிட்டு வருகிறது. விரிவான செய்திக்கு..
சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
தில்லியில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 228 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதேப்போல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் முகக்கவசங்களால் கரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விரிவான செய்திக்கு..
ஒருவருக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டால் அவர் அதிகபட்சமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 28 நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர் கரோனா பாதிப்பு இல்லாதவர் என்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 452லிருந்து 480ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 28 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் சனிக்கிழமை தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 14,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,906 ஆக உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்துள்ளனர். 480 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.விரிவான செய்திக்கு..
பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்கும் தபால் துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.விரிவான செய்திக்கு..
தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாக கூறிய அவர் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,355 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம் 69 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில புணேயில் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று தற்போது உறுதியானது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை: கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு நாளை முதல் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் காய்கனி வாங்க வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
"கரோனா நோய்த் தொற்று மிகப் பெரிய சவால், ஆனால், அதேவேளையில் ஒரு வாய்ப்பும்கூட" என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. விரிவான செய்திக்கு
கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய முதியவர், சிறுநீரக, இதய நோய் காரணமாக உயிரிழந்தார். விரிவான செய்திக்கு
மக்களிடம் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனையை மேற்கொள்வதற்காக 5 லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. விரிவான செய்திக்கு...
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ஜின்பிங் எழுதிய கட்டுரை ஏப்ரல் 16ஆம் தேதியிட்ட ஜியு சி இதழில் வெளியாக உள்ளது. விரிவான செய்திக்கு...
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா். விரிவான செய்திக்கு..
புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,759-இல் இருந்து 13,387 -ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் புதிதாக 826 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 847 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 14,576ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கரோனா வைரஸால் இதுவரை 1,08,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,599 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 138ஆக உள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 255 பேர் குணமடைந்துள்ளனர்.
உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டேராடூனில் 20 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மும்பையிலுள்ள தாராவி குடிசைப் பகுதியில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தாராவியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,835 ஆகவும் பலி எண்ணிக்கை 452 ஆகவும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஸ்பெயினில் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,000 ஐ எட்டியுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விரிவான செய்திக்கு..
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 89 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
ஆந்திர மாநிலத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளதுவிரிவான செ.ய்திக்கு..
மத்தியப் பிரதேசத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,299 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தூர் மாவட்டத்தில் மட்டும் 842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.வரிவான செய்திக்கு..
சென்னை: பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும், திட்ட மதிப்புகளும், வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.விரிவான செய்திக்கு...
ஜெனீவா: கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த நாடு கரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.விரிவான செய்திக்கு,,,
கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4,591 பேர் மரணம் அடைந்துள்ளனர்.விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று 34 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு...
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. விரிவான செய்திக்கு..
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில் கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் தந்தையும்கூட சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்த துயரம் நேர்ந்திருக்கிறது. விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.