FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 10:00 pm IST
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கட்டடம்.
பகிர்:

உ.பி.யில் ஆய்வுக்குச் சென்ற டி.எஸ்.பி. மீது கடும் தாக்குதல்!

சட்டவிரோத பால் பண்ணை மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற காவல் துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி அதிகாரியை அங்கிருந்த மக்கள் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.

தமிழர்கள் சுட்டுக் கொலை; பட்டும் படாமல் ஓர் அறிக்கை: முதல்வர் மீது குற்றச்சாட்டு!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் பட்டும் படாமல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இனி வீட்டு வேலையும் காலி!

வீட்டு வேலைகளைச் செய்ய செய்யறிவு (ஏஐ) இயந்திரங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் உடனடி கூலிங்!

ஹையர் நிறுவனத்தின் கிராவிட்டி ஏஐ என்ற குளிரூட்டி (ஏசி) சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவில் கூட உடனடியாக குளிர்ச்சியை வழங்கும் வகையில் அதீத திறன் வாய்ந்ததாக ஹையர் நிறுவனம் இதனைக் குறிப்பிடுகிறது.

ஸ்மார்ட்போன்களின் விலை கிடுகிடு உயர்வு

சீனாவைச் சேர்ந்த போக்கோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ. 5 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளன.

மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்!

குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அபிஜீத் தீப்கேவின் கிராம அரசுப் பள்ளிக்கு முதல் கணினி!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக கணினி வாங்கப்பட்டுள்ளது.

கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சி: திருமாவளவன்

கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சி என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (ஆக. 18) பேசினார்.

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை என அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி, செவ்வாய்க்கிழமை (ஆக. 18) தெரிவித்தார்.

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவு! த்ரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அதிக யூகங்கள் வெளியானவர்களின் பட்டியலில் நடிகை த்ரிஷா முன்னணியில் இருப்பார்.

தலையிடக் கூடாது! 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.கே. சிவகுமார் பதில்

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்ணாசாலை உயர்நிலை மேம்பாலம் கட்டுமானத்தில் சிக்கல்? வளையும் தூண்கள், வளையாத சாலை!

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான அண்ணாசாலை மேம்பாலம், செப்டம்பரில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பேரவைத் தலைவரை புகழ்ந்த எ.வ. வேலுவின் பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்!

திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு பேச்சால் முதல்வர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

தவெக அலுவலகத்தில் பெரியார் சிலை; அண்ணா அறிவாலயத்தில் இல்லை: எ.வ. வேலு - ஆதவ் விவாதம்!

தவெக அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது; ஆனால், அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இன்னும் நிருவப்படவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை; குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: வனத் துறை அமைச்சர்

கர்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் விரைவில் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஆக. 18)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.

முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி... வங்கதேச 2-வது டெஸ்ட் ஆஸி. அணியில் வெதரால்ட் நீக்கம்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் டெஸ்ட்டில் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டை நீக்கிவிட்டு மேட் ரென்ஷாவை மீண்டும் அணியில் சேர்த்துள்ளது.

டெண்டரில் முறைகேடா?

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.

6- வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி!

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகளை நியமித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு..

ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து: 16 நாள்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள்!

ஜார்க்கண்ட்டில் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹதோ தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 18), விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 12,174 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, இன்று(ஆக. 18) 3வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்

நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்று, ராகுல் காந்தி உறுதியளித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை வியக்கவைத்த இந்திய தேர்தல் முறை.. அதிபர் டிரம்ப்பின் பாராட்டுப் பதிவு!

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments