FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை - விரிவான விவரங்களை அறிய...

எல்லையில் பாதுகாப்புப் படையினர்
பகிர்:
Updated On : 10 மே 2025, 10:46 am IST

முந்தைய செய்திகள்

Updated On : 10 மே 2025, 10:43 am IST

26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள்: ராணுவம்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபஸில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மெர், பூஜ், குவார்பெட், லாக்கி நாலா உள்ளிட்டப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் கண்டறியப்பட்டன.

படிக்க | எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம்

Advertisement

Advertisement

Updated On : 10 மே 2025, 10:43 am IST

இங்கிலாந்து அழைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

Updated On : 10 மே 2025, 10:43 am IST

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்

போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

படிக்க.. பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

Updated On : 10 மே 2025, 10:43 am IST

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்

ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இந்தியா இந்த தாக்குதல்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது.

Updated On : 10 மே 2025, 10:43 am IST

சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.

படிக்க.. பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

Updated On : 10 மே 2025, 11:28 am IST

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்

போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

படிக்க.. போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

Updated On : 10 மே 2025, 11:28 am IST

இந்தியா தக்க பதிலடி

பாகிஸ்தானுக்கு சரியான நேரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

படிக்க.. பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

Updated On : 10 மே 2025, 11:28 am IST

எஸ்-400 சுதர்சன் சக்ரா

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

படிக்க.. எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்

Updated On : 10 மே 2025, 12:34 pm IST

பயங்கரவாத முகாம்கள் தரைமட்டம்

இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள், இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்படும் அடுத்தடுத்த விடியோக்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

படிக்க.. பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

Updated On : 10 மே 2025, 12:34 pm IST
Updated On : 10 மே 2025, 12:40 pm IST

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 10 மே 2025, 12:41 pm IST

வான்வெளியை மூடியது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது.

படிக்க.. 3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

Updated On : 10 மே 2025, 1:56 pm IST

பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பின் முப்படைத் தளபதிகள் மற்றும் முப்படைத் தலைமை தளபதி அனில் சௌகான் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து 3 மணி நேரமாக இந்த ஆலோசனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Updated On : 10 மே 2025, 2:58 pm IST

பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பரிசீலிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படிக்க.. இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பரிசீலிக்கத் தயார்: பாகிஸ்தான் அமைச்சர்

Updated On : 10 மே 2025, 2:58 pm IST

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரம்

சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

படிக்க.. இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது: தகவல்கள்

Updated On : 10 மே 2025, 2:59 pm IST

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ்

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

படிக்க.. ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என தாக்குதலுக்கு பெயரிட்ட பாகிஸ்தான்! அர்த்தம் தெரியுமா?

Updated On : 10 மே 2025, 4:28 pm IST

ஏவுகணை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

படிக்க.. ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரசு மறுப்பு

Updated On : 10 மே 2025, 4:39 pm IST

பயங்கரவாத தாக்குதல்கள் போர் நடவடிக்கையாகக் கருதப்படும்!

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் இனிமேல் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் அவையனைத்தையும் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்களாகக் கருதி தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு இன்று(மே 10) தெரிவித்துள்ளது.

Updated On : 10 மே 2025, 5:27 pm IST

இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு! 

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார். அதேபோல, ஜி 7 நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Updated On : 10 மே 2025, 5:43 pm IST

போர் நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் 

இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(மே 10) மாலை தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 மே 2025, 5:55 pm IST

இந்தியாவுடன் போர் நிறுத்தம் - பாக். துணை பிரதமர்

இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்து கொள்ள பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்திருப்பதை அந்நாட்டின் துணை பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.

Updated On : 10 மே 2025, 7:53 pm IST

சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு 

போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Updated On : 10 மே 2025, 6:13 pm IST

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்!

இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பது குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 10 மே 2025, 8:41 pm IST

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக அறிந்துகொள்ள: பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

Updated On : 10 மே 2025, 9:13 pm IST

இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 மே 2025, 10:32 pm IST

ஜம்மு காஷ்மீரில் மின் விநியோகம் நிறுத்தம்: உஷார் நிலையில் ராணுவம்

ட்ரோன் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத்தில் பல்வேறு இடங்களிலும் மீண்டும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 10 மே 2025, 10:45 pm IST

ஜம்முவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்!

ஜம்மு அருகே நக்ரோடாவில் உள்ள இந்திய ராணுவ தளத்தைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஜம்முவிலிருந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வரும் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Updated On : 10 மே 2025, 10:52 pm IST

நக்ரோடாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவில்லை

ஜம்மு அருகே நக்ரோடாவில் உள்ள இந்திய ராணுவ தளத்தைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.

Updated On : 10 மே 2025, 11:00 pm IST

ட்ரோன் தாக்குதல்கள் நிறுத்தம்!

இரவு 11 மணி நிலவரப்படி, இந்திய எல்லைக்குள் ட்ரோன் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், வான் வெளி பாதுகாப்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Updated On : 10 மே 2025, 11:29 pm IST

போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி!

இரவு 11 மணிக்கு செய்தியாளர்களுடன் பேசிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் முழுவீச்சில் பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக” தெரிவித்தார்.

Updated On : 11 மே 2025, 12:09 am IST

அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு 

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெரிவித்ததாக சீன அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தவிர்க்க முடியாத சீனாவின் அண்டை நாடுகள். இரு நாடுகளும் போரை நிறுத்துவதை சீனா ஆதரிக்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 மே 2025, 12:22 am IST

மர்ம நபர் துப்பாக்கிச் சூடு

ஜம்மு - காஷ்மீர் நக்ரோட்டா ராணுவ நிலையம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவத்தின் வொயட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளது. மர்ம நபரைத் தேடி வருவதாகவும் இந்திய வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 மே 2025, 8:51 am IST

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!

போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.

ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

Updated On : 11 மே 2025, 3:00 pm IST

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது.

Updated On : 11 மே 2025, 3:34 pm IST

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு அழைப்பு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Updated On : 11 மே 2025, 4:58 pm IST

ஆபரேஷன் சிந்தூர்: மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று விமானப்படை தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விரிவான விவரங்கல் அனைத்தும் இன்று மாலை செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. அதில் முப்படைகளின் தலைமை தளபதி பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 மே 2025, 6:38 pm IST

முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களுடன் சந்திப்பு

புது தில்லியில் இன்று(மே 11) மாலை முப்படை அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பின் தொடர்ந்த சண்டை குறித்த விவரங்களைச் செய்தியாளர்களுடன் பகிர்ந்தனர்.

Updated On : 11 மே 2025, 7:08 pm IST

ஆபரேஷன் சிந்தூரில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி!

9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - முப்படை அதிகாரிகள்

Updated On : 11 மே 2025, 8:09 pm IST

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை!

இந்திய எல்லைகளில் இன்றோ அல்லது இனிமேலும் இதுபோன்ற இரவு நேர தாக்குதல்களில் ஈடுபட்டால் எதிர்வினை மிகக் கடுமையாக இருக்குமென்பதை அந்நாட்டு ராணுவ தலைமைக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம் - முப்படை அதிகாரிகள்

Updated On : 11 மே 2025, 9:09 pm IST

அலை அலையாய் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! 

பாகிஸ்தானிலிருந்து அலை அலையாய் ஏவப்பட்ட பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.

Updated On : 11 மே 2025, 9:25 pm IST

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated On : 12 மே 2025, 1:44 am IST

எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தி எதிரி விமானங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதுடன் இந்திய வான்வெளிக்குள் நுழைவதை வெற்றிகரமாக முறியடித்தோம் என விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.

முழு விவரம்: எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments