FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை

தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:31 pm IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - CM Vijay
பகிர்:
Updated On : 5 ஆகஸ்ட் 2026, 8:16 am IST

முதல் பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு, இன்று காலை 2026 - 2027 -ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.

பட்ஜெட் தயாரிப்பு தொடா்பாக துறைவாரியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தனித்தனியாக விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளாா். இதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சா் மரிய வில்சன் பட்ஜெட் தயாரித்துள்ளாா்.

Advertisement

Advertisement

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 8:16 am IST

தமிழகத்தின் கடன் சுமை

கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அரசுக்கு ரூ.13.18 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது என்றும், ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது என்றும், அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 காசுகள் வட்டிக்கே செலவாகிறது என்றும் நிதியமைச்சா் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டாா்.

ஜூன் 19-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதிநிலைமைக்கு ஏற்ப படிப்படியாக தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் விஜய் கூறினாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 8:16 am IST

எதிர்பார்ப்புகள்

ரூ. 75,000 வரை பயிா்க் கடன்கள் தள்ளுபடி, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வா் விஜய் அறிவித்தாா்.

இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 2,500-ஆக உயா்த்தப்படும்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 நிதியுதவி, திருமணத்துக்கு 1 பவுன் தங்கம், ரூ. 20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்ட தவெக தோ்தல் வாக்குறுதிகளின் அமலாக்கம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:32 am IST

ஜென்ஸீக்களின் எகிறும் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சியமைந்து, முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தவெகவுக்கு வாக்களித்த ஜென்ஸீக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:33 am IST

'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக கடந்தாண்டு தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றப்பட்ட நிலையில், இந்தாண்டும் அது தொடர்கிறது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:34 am IST

முதல்வர் விஜய் புறப்பட்டார்

தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:50 am IST

அமைச்சர்கள் வழிபாடு

தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் அமைச்சர்கள் வழிபாடு செய்தனர்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:59 am IST

பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:07 am IST

உண்மையான சமூக நீதி

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு உண்மையாக சமூக நீதிக் கொள்கை கொண்டது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:10 am IST

தாய்மாமன் சீர் திட்டம்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப். 15 முதல் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் என்றார் நிதியமைச்சர் மரிய வில்சன்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:22 am IST

நிதித் தட்டுப்பாடு!

திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் குறைவாகவே உள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:37 am IST

நவீன சைக்கிள்; மடிக்கணினி!

பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:39 am IST

தமிழக பட்ஜெட் 2026!அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:40 am IST

தமிழக பட்ஜெட்.. நேரலை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:56 am IST

மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி!

மதுரையில் சிறப்பு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:57 am IST

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:57 am IST

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப். 15 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:29 am IST

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்

திருப்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 11:30 am IST

ஜென் ஸீ-க்களுக்கான அறிவிப்புகள்

தமிழ்நாடு பட்ஜெட்டில் ஜென் ஸீ இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:01 pm IST

சென்னைக்கான அறிவிப்புகள்

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை நகருக்கான பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

சென்னையின் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் என சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் மாற்றப்படும்.

சென்னைக்கு 1,000 புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். பேருந்துப் பணிமனைகளில் இவி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதற்காக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:36 pm IST

20 லட்சம் ஐடி வேலைவாய்ப்பு: நிதியமைச்சர் மரிய வில்சன்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:36 pm IST

மீன்பிடி உதவித்தொகை ரூ. 7000-ஆக உயர்வு! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகையை ரூ. 6,000-லிருந்து ரூ. 7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:36 pm IST

பட்ஜெட் 2026! மண்ணின் மகள் திட்டத்தில் முத்திரைத்தாள் வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு!

தமிழக பட்ஜெட் 2026-ஆம் ஆண்டில், சமூக நீதித்துறையில், முத்திரைத்தாள் வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கும் மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:36 pm IST

பட்ஜெட் 2026! இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட் 2026-ஆம் ஆண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:39 pm IST

பட்ஜெட் 2026: 'மை ஹோம்' திட்டம்! அனைவருக்கும் தரமான வீடு!

 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:39 pm IST

பட்ஜெட் 2026: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள் என்னென்ன? 

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:55 pm IST

தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:55 pm IST

பட்ஜெட் 2026! தமிழக அரசின் அனைத்து திட்டப் பெயர்களிலும் புதிய சொல் அறிமுகம்!

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களின் பெயர்களிலும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:55 pm IST

கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026

தமிழக அரசின் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் செய்வதை அரசு உறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:14 pm IST

ரூ. 2,500 அறிவிப்பு இல்லை

தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்துவது மற்றும் 6 இலவச சமையல் எரிவாயு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:15 pm IST

150 நிமிடங்கள் உரை

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்முறையாக உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 150 நிமிடங்கள் பேசினார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

போதையில்லாத தமிழ்நாடு!

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:52 pm IST

செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!

செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:52 pm IST

எங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை!

திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:52 pm IST

காவிரி, வைகை, தாமிரவருணியில் நதிச் சுற்றுலா!

காவிரி, வைகை, தாமிரவருணியில் நதிகளில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:53 pm IST

கிராமப்புற வேலை 150 நாள்கள் உறுதி!

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாள்கள் வேலைவாய்ப்பை வழங்கும் 'வெற்றி 150' என்ற திட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:55 pm IST

பட்ஜெட் 2026! தமிழுக்கென பிரத்தியேக செய்யறிவு மாதிரி உருவாக்கப்படும்!

தமிழுக்கென பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:55 pm IST

பட்ஜெட் 2026! ஓசூர் - கர்நாடகத்தின் பொம்மசந்திரா இடையே புதிய மெட்ரோ ரயில் திட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து, தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருவதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:24 pm IST

பட்ஜெட் 2026! சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு!

சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:44 pm IST

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் தரமான கோதுமை மாவு!

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:13 pm IST

ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவும் - செலவும்! பட்ஜெட் 2026

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் தவெக அரசு, தன்னுடைய முதல் நிதிநிலை அறிக்கையை இன்று பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:13 pm IST

ஒரு ரூபாயில் செலவு

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:13 pm IST

ஒரு ரூபாயில் வரவு

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:04 pm IST

தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, ”மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:34 pm IST

தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா?

தமிழக அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆக. 5) குற்றம் சாட்டினார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:34 pm IST

பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா?

தமிழகத்தில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:34 pm IST

பட்ஜெட் 2026: புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! நிதித்துறை செயலாளர் விளக்கம்!

2026 தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் இன்று (ஆக. 5) விளக்கம் அளித்தார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:02 pm IST

தெளிவான திசையை காட்டும் தமிழ்நாடு பட்ஜெட்: காங்கிரஸ்

தமிழ்நாடு பட்ஜெட் தெளிவான திசையை காட்டுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:32 pm IST

பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்

தமிழ்நாடு பட்ஜெட் என்பது வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:10 pm IST

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments