முகப்பு
சிறப்புச் செய்திகள்

அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்... 

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:05 PM
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2020 at 8:39 AM

 

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...    லைவ் அப்டேட்ஸ்

Updated On : 22 ஏப்ரல், 2020 at 8:39 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 19,984-ஆக அதிகரிப்பு

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...
Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:54 PM

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:53 PM

கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக்கூடாது: தமிழக அரசு

 ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:52 PM

உடல் அடக்கத்தை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:40 PM

இளநீர் பறிப்பவரின் மனித நேயம்: சொற்ப வருவாயில் காவலர்களுக்கு உதவி வருகிறார்

 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:39 PM

தில்லியில் கரோனா பாதிப்பு: தற்போதைய நிலை என்ன?

புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 12:26 PM
Updated On : 21 ஏப்ரல், 2020 at 10:50 AM

ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற காவலர்கள்

 இந்தியாவில் கரோனா  பாதிப்பில் முதல் இடத்தில் இரப்பது மகாராஷ்டிரம்.  இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 10:49 AM

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும் அருணாச்சல்

 நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் மட்டும் இதுவரை கரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. விரிவான செய்திக்கு.. 

Updated On : 21 ஏப்ரல், 2020 at 10:49 AM

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும் அருணாச்சல்

 நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலம் மட்டும் இதுவரை கரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. விரிவான செய்திக்கு.. 

Updated On : 21 ஏப்ரல், 2020 at 10:19 AM

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 823 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 823 பேர் பலியாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 9:51 AM

தெலங்கானாவில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தெலங்கானாவில் புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 9:26 AM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 552 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 9:25 AM

கர்நாடகத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்வு

 கர்நாடகத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 9:23 AM

கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​கேரளத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 9:15 AM

இந்தியா குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

 தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள 125 குடும்பங்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2020 at 8:59 AM

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656-லிருந்து 18,601-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 550-லிருந்து 590-ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:56 AM

தில்லியில் கரோனா பாதிப்பு 2,081 ஆக உயர்வு: கேஜரிவால் தகவல்

தில்லியில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:55 AM

சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக நிலவரம்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:46 AM

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:06 AM

இந்தியாவில் 600-ஐத் தாண்டியது பலி எண்ணிக்கை

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 6:01 AM

25 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

உலக அளவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்றுமுன்னர் 25 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு...

Updated On : 21 ஏப்ரல், 2020 at 4:46 AM

கரோனா பாதித்து உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: ஒடிசா அரசு

 புவனேஸ்வர்: கரோனா பாதித்த உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு

...
Updated On : 21 ஏப்ரல், 2020 at 4:44 AM

தெலங்கானா - சட்டீஸ்கர்.. 100 கி.மீ., தொடர்ந்து 3 நாள்கள் நடந்தே வந்த சிறுமி மரணம்

 ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார். விரிவான செய்திக்கு

....
Updated On : 21 ஏப்ரல், 2020 at 4:43 AM

சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

 சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 1ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக உள்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

 
Updated On : 21 ஏப்ரல், 2020 at 4:19 AM

கர்நாடகத்தில் கரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க ஐ.சி.எம்.ஆர். அனுமதி

 கர்நாடகத்தில் கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மூலமாக சிகிச்சை தர இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 2:49 AM

ராஜஸ்தானில் விரைவு பரிசோதனைக் கருவிகள் பயன்பாடு நிறுத்தம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பரிசோதனையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகள் உபயோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 1:44 AM

ஊடகவியலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்: கேஜரிவால்

 புது தில்லி: மும்பையில் ஊடகவியலாளர்கள் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், புது தில்லியில் உள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு...

Updated On : 21 ஏப்ரல், 2020 at 1:38 AM

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தடை: டிரம்ப் முடிவு

 அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்குத் தற்காலிகமாக தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக  அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 21 ஏப்ரல், 2020 at 1:17 AM

ஆந்திரத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு

 ஆந்திரத்தில் மேலும் 35 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது 757 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:50 PM

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறிகள் இன்றி கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:49 PM

குஜராத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 4 பேர் பலி

குஜராத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,851 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:49 PM

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கும்பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:48 PM

கேரளத்தின் தளர்வு அறிவிப்புக்கு மத்திய உள்துறை எதிர்ப்பு

கேரளத்தில் ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:22 PM

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்த மருத்துவர் மரணம்

மொராதாபாத்: உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:20 PM

இந்தியா உட்பட 10 நாடுகளை விட அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை: டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: கரோனா அதிகம் பாதித்த இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:19 PM

தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2003 ஆக உயர்வு

புது தில்லி: புது தில்லியில் நேற்று புதிதாக 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 2003 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:17 PM

அறிவுறுத்தல்களை மீறி ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: மத்திய அரசு

புது தில்லி: அறிவுறுத்தல்களை மீறி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 12:09 PM
Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:40 AM

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 449 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 449 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:39 AM

தாராவியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மும்பை மாநகராட்சி

மும்பை தாராவி குடிசைப் பகுதியில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:39 AM

ரயில், விமானம் சேவையை தொடங்குவது பற்றி முடிவெடுக்கவில்லை

ரயில், விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடா்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:38 AM

ஊரடங்கு தொடரும்: தளர்வுகள் பற்றி முதல்வா் இன்று முடிவு

மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப சில குறிப்பிட்ட துறைகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து நிபுணா் குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை முடிவு செய்ய உள்ளாா். அதுவரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:36 AM

சென்னையில் இன்று ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 10:35 AM

இந்தியாவில் கரோனா பாதித்தோர் 17,265-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,116-லிருந்து 17,265-ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேமசயம் பலியானோரின் எண்ணிக்கை 519-லிருந்து 543-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,302-லிருந்து 2,547-ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 20 ஏப்ரல், 2020 at 7:19 AM

சென்னையில் இன்று 18 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக நிலவரம்

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 6:16 AM

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,520 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 6:00 AM

மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேதனை அளிக்கிறது: தமிழிசை ட்வீட்

சென்னை மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:57 AM

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:46 AM

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.விரிவான செய்திக்கு...

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:44 AM

தில்லியில் பீட்சா உணவு முகவருக்கு கரோனா: அதிக அபாயம் உடைய 16 பேருக்கும் பாதிப்பில்லை

தில்லியில் பிரபல நிறுவனத்தின் பீட்சாக்களை வாடிக்கையாளருக்கு விநியோகித்த உணவு முகவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 16 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:41 AM

ஆந்திரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 722 ஆனது

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு...

Updated On : 20 ஏப்ரல், 2020 at 5:39 AM

தில்லியில் பீட்சா உணவு முகவருக்கு கரோனா: அதிக அபாயம் உடைய 16 பேருக்கும் பாதிப்பில்லை

 தில்லியில் பிரபல நிறுவனத்தின் பீட்சாக்களை வாடிக்கையாளருக்கு விநியோகித்த உணவு முகவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 16 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான சேய்திக்கு...

Updated On : 20 ஏப்ரல், 2020 at 4:50 AM

கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 4:05 AM

கரோனாவால் உயிரிழந்தோரை எங்கள் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யலாம்: விஜயகாந்த்

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 4:02 AM

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 3:09 AM

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 3:05 AM

தமிழகத்தில் தளர்வு இல்லை; ஊரடங்கு தொடரும்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்றும் மே 3 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 2:14 AM

கரோனா: அபாய நிலையில் மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூர்

புது தில்லி: இந்தியாவில் தற்போது கரோனா தொற்று நோயால் மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், புணே, இந்தூர், மேற்கு வங்க மாநிலத்தின் மேலும் சில பகுதிகளில் அபாய சூழ்நிலை இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.விரிவான செய்திக்கு...

Updated On : 20 ஏப்ரல், 2020 at 2:12 AM

விரைவு பரிசோதனை கருவியில் கரோனா இருப்பதாக வந்தவருக்கு கரோனா இல்லை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அறிகுறியுடன் இருந்தவருக்கு விரைவு பரிசோதனை கருவியில் கரோனா இருப்பதாக முடிவு வந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு...

Updated On : 20 ஏப்ரல், 2020 at 1:50 AM

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 1:49 AM

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 395 ஆக உயர்வு!

கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 20 ஏப்ரல், 2020 at 1:31 AM

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 1084ஆக உயர்வு

 உத்தரப்பிரதேசத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1084ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 பேர் பலியானநிலையில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.