LIVE

அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ்

DIN

சீனாவில் தொடங்கி அந்த நாட்டில், இந்த நாட்டில்என்று செய்திகளாகவும் தகவல்களாகவும் இருந்த கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் இப்போது இந்தியாவுக்குள்ளும் தமிழகத்திற்குள்ளும் வந்துவிட்டன.

தமிழகத்திலேயே கரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிறைய தகவல்கள் வரத் தொடங்கிவிட்டன.

உலகம் முழுவதிலும் இருந்து மட்டுமல்ல,உள்ளூர் அளவிலுமான கரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் உடனுக்குடன் இங்கே - கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.

கரோனா: சென்னையில் 1890 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்!

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு சென்று விட்டு சென்னை திரும்பியதாக 1890 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னை தேனாம்பேட்டை மற்றும் அடையார் மண்டலங்களில் அதிகயளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு...

முகக்கவசம், கிருமிநாசினி, தொ்மோமீட்டா் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சா் எச்சரிக்கை

முகக்கவசம், கிருமி நாசினி , இன்ஃப்ராரெட் தொ்மோ மீட்டா் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா். விரிவான செய்திக்கு...

ஆசியாவை மிஞ்சிய கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை: எல்லைகளை மூடியது ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆசியாவைவிட அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் தனது எல்லைகளை புதன்கிழமை மூடியது. விரிவான செய்திக்கு...

சென்னை வந்த உ.பி. இளைஞருக்கு கரோனா பாதிப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தில்லியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்த உத்தரப் பிரதேச இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விரிவான செய்திக்கு...

கரோனா பாதிப்பு சூழல்: பிரதமா் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை

கரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளாா். இத்தகவலை, பிரதமரின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது. விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா பாதிப்பு 166ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

மார்ச் 31-க்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு நம்பிக்கை

மார்ச் 30-ம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு எதிர்பார்க்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பால் தொடரும் பலி எண்ணிக்கை: அஞ்சும் இத்தாலி மக்கள்

இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் புதன்கிழமை ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 475 பேர் பலி

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா எதிரொலி: 168 ரயில் சேவைகள் ரத்து

கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 168-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு...

கரோனா வைரஸ் தாக்கம்: 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து

கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து, சென்னை-மதுரைக்கு இயக்கப்படும் ஏசி துரந்தோ விரைவு ரயில் உள்பட 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் 210-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு...

கரோனா: கோழிகளை ஏரியில் வீசிச் சென்ற வியாபாரிகள்

திருப்பத்தூா் அருகே கரோனா எதிரொலியாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லா் கோழிகளை வியாபாரிகள் உயிருடன் ஏரியில் வீசிச் சென்றனா். விரிவான செய்திக்கு...

கரோனா வதந்தி பரப்பிய இளைஞா் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதித்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விரிவான செய்திக்கு...

பள்ளிக்குச் செல்லாத 85 கோடி மாணவா்கள்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுமாா் 85 கோடி மாணவா்கள் வகுப்புகளைத் தவறவிட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

பாகிஸ்தானில் கரோனா பலி 2ஆக உயர்வு

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனாவில் இருந்து மீண்ட 103 வயது ஈரான் மூதாட்டி

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. விரிவான செய்திக்கு...

மகாராஷ்டிரத்தில் கரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரத்துடன் ரயில்கள் இயக்கம்

இலங்கையில் பொது விடுமுறை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ரத்து

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுவெளிநாடுகளில் இருந்து வரும் விமான சேவையும்ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவையையும் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்வதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.

லேஹ் பகுதியில் முதல் முறையாக ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு

புது தில்லி: லேஹ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 34 வயது ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.விரிவான செய்திக்கு..

புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு; நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆனது

புணேவில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், புணேவில் 19 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது: மார்ச் 31 வரை அனுமதி இல்லை

தஞ்சாவூர் பெரிய கோயில் மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்கிறது சீனா

கரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா நோயாளிகளை அசோக் நகரில் தங்க வைக்க எதிா்ப்பு

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை அசோக் நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க அங்குள்ள நலவாழ்வு சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.விரிவான செய்திக்கு...

கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது

 உலகளவில் கரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 7,984ஆக உயர்ந்துள்ளது.  சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 165 நாடுகளுக்குப் பரவியுள்ளது. விரிவான செய்திக்கு...

சென்னையிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

 கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை அடுத்து ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை ரயில் நிலையங்களில் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ 10 -இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு...

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

 மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வெளிநாட்டவர்கள் உள்பட 147 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்பி சுரேஷ் பிரபு

 கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். விரிவான செய்திக்கு...

நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு

 அரசியல் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு...

ரயில் பயணிகள் குறைந்தனர்: 45% முன்பதிவு ரத்து

 கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, தேவையில்லாத பயணத்தை பொதுமக்கள் தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.விரிவான செய்திக்கு...

829 கப்பல்களில் 29,058 பயணிகள்

 கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 829 கப்பல்கள் நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல்களில் 29,058 பயணிகள் உள்ளனா். விரிவான செய்திக்கு...

மலேசியாவில் இருந்து இந்தியா்களை அழைத்து வர ஏா் ஏசியா விமானங்களுக்கு அனுமதி

 மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்தியா்களை அழைத்து வர ஏா் ஏசியா விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.விரிவான செய்திக்கு...

உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு

 ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாராத அமைப்பின் தலைமையகத்தில் இருவருக்கு கொரானா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 3-ஆக உயா்வு

 மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

ராஜஸ்தானில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தானில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு..

சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திகளுக்கு..

குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

கரோனா எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உ.பி.யில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை

கரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

திருமணத்தில் மணமக்கள் உள்பட அனைவருக்கும் முகக்கவசம்! வைரல் விடியோ

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திரத்தில் ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் உள்படஅனைவரும் முகக்கவசத்துடன் காணப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விரிவான செய்திக்கு..

வெளிநாடுவாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் 276 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.அதிகபட்சமாகஈரானில் 255 இந்தியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

கரோனா விழிப்புணர்வுக்காக நடனமாடும் கேரள போலீஸார்! வைரல் விடியோ

கேரள போலீஸார் கரோனா விழிப்புணர்வு குறித்து நடனமாடும் விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விரிவான செய்திக்கு..

நம்பாதீர்கள்: சமூக ஊடகங்களில் பரவும் தவறான கரோனா தகவல்கள்

கரோனா அச்சத்தைப் போலவே சமூக ஊடகங்களில் ஏராளமாகத் தவறான தகவல்களும் பரவிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த வகையிலும் நிரூபிக்கப்படாதவை. எனவே, மக்கள் இவற்றை நம்பிச் செயல்படுவது எந்த விதத்திலும் நல்லதல்ல.விரிவான செய்திக்கு..

கோவாவில் நார்வே நாட்டைச் சேர்ந்தவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் கொண்ட கோவாவில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கோவா நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஷ்வஜித் ராணே தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரியில் இருந்து 6ம் தேதி இந்தியா வந்த அந்த நபர், தில்லி, ஆக்ரா, அஸ்ஸாம், மேகாலயாவுக்கும் சுற்றுலா சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு காலை உணவுடன் வழங்கப்பட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்

கரோனா வைரஸ் விவகாரம்: உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தல்படி செயல்படுகிறோம்

 கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி செயல்படுவதாக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு கரோனா வைரஸ் விவகாரத்தை எதிா்க்கட்சி துணைத் தலைவா் துரைமுருகன் எழுப்பினாா்.  மேலும் விரிவான செய்திகளுக்கு..

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு

கரோனா அச்சம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது

கரோனா வைரஸால் பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.

கரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குளிர்சாதனப் பேருந்துகளில் போர்வைகள் வழங்கத் தடை

அரசு மற்றும் தனியார் குளிர்சாதனப் பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்பட வேண்டும், போர்வைகள் வழங்கப்படுவது நிறுத்திவைக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..

ரூ. 50 ஆக உயர்ந்தது ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட்!

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு  முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க..

தனிமைப்படுத்தப்படுவோரின் உடலில் முத்திரை குத்தும் மகாராஷ்டிர அரசு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் அல்லது கரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.தனிமைப்படுத்தப்படுவர்கள், மருத்துவக் கண்காணிப்பையும் மீறி வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களது கையில் முத்திரைக் குத்தும் நடவடிக்கையில் மகாராஷ்டிர அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

இந்த ஐந்து விஷயங்களையும் செய்யுங்கள்: கூகுள் சொல்லும் அறிவுரை

  • 1. கைகள்: அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்
  • 2. கை மூட்டு: இருமும் போது இதனைப் பயன்படுத்துங்கள்.
  • 3. முகம் : இதனைத் தொடாதீர்கள்.
  • 4. கால்கள்: சுமார் 3 அடி இடைவெளி விட்டு நில்லுங்கள்.
  • 5.உணர்வு: உடல் நலக் குறைவாக உணர்ந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூகுள் வலியுறுத்தியுள்ளது.
  • உத்தரகண்டில் ரயில்களில் தூய்மைப்பணிகள்

    சென்னையில் சத்யம் திரையரங்கு மூடப்பட்டுள்ளது

    தமிழகத்தில் வீடு தேடி வந்து உணவுப் பொருளைக் கொடுத்த அங்கன்வாடி ஊழியர்கள்

    மலேசியாவில் 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு!

    பிலிப்பைன்ஸில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட இந்திய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.மேலும் விரிவான செய்திக்கு..

    மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வரத் தடை!

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..

    சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலின் கையை தூய்மைப்படுத்தும் திரவம் கொடுக்கப்பட்டபோது..

    கரோனா வைரஸ் பாதிப்பில் கேரளத்தை முந்திய மகாராஷ்டிரம்; 15 மாநிலங்களில் பாதிப்பு

    இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் கேரளத்தை முந்தியது.

    மகாராஷ்டிரத்தில் 3 வெளிநாட்டவர் உட்பட 36 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று மரணம் அடைந்தார். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    யாரும் வெளியே வர வேண்டாம்: பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை

    பிரிட்டனில் அநாவசியமாக யாரும் வெளியே வர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படியொரு நிலையைக் கண்டதில்லை என்கிற  அளவுக்குப் போர்த் திட்டத்தை வகுத்துச் செயல்படுகிறது பிரிட்டிஷ் அரசு.

    கரோனா: நீலகிரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற ஆட்சியர் உத்தரவு

    நீலகிரி: நீலகிரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நாளை மாலைக்குள் வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் உடனடியாக மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர்?

    கரோனா பாதித்த கூகுள் ஊழியரின் மனைவி, மாமனார் மீது வழக்குப் பதிவு

    பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றக் குற்றத்துக்காக, அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய மாமனார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனம் தொடக்கம்

    கரோனா வைரஸ் பரவி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் பக்தா்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் நடைபாதை மாா்க்கங்களில் சுகாதாரப் பணியாளா்கள் 24 மணி நேரமும் 3 முறை சுழற்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பக்தா்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்கள் யாவும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமி நாசினி மருந்துகளால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், பக்தா்கள் காத்திருப்பு அறையில் பல மணி நேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று மற்றவருக்கு பரவும் அபாயம் உள்ளதால், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். தா்ம தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தா்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீட்டு தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனா்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்படும் தாஜ்மகால்

    இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

    புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் 64 வயது முதியவர் பலியான நிலையில், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
    உத்தரப்பிரதேசத்தில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பிரான்ஸ் சென்று வந்தவர். இருவருமே தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    தில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜகாட் மூடப்பட்டுள்ளது.

     கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கடந்த வாரம் கரோனா பாதித்து உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 63 வயதாகும் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    லடாக்கில் மேலும் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் லடாக்கில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ஷீரடி சாய்பாபா கோயிலை மூடுவதற்கு முன்பு, கடைசி ஆர்த்தியில் பங்கேற்ற பக்தர்கள்

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..

    உலக அளவில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடும் உயர்வு

    சீனாவை சூறையாடிவிட்டு உலக நாடுகளை நோக்கிப் படையெடுத்த கரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்தைத் தாண்டியது.

    திங்கட்கிழமை இரவு 10.30 மணி நிலவரப்படி145 நாடுகளில் பரவியிருக்கும் கரோனா வைரஸ் பாதித்து 7,007 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 1,75,530 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாராசிட்டமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு: கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி

    பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா  வைரஸை வெற்றிகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    வெளியே வராதீர்கள் : பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை

    இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படியொரு நிலையைக் கண்டதில்லை என்கிற  அளவுக்குப் போர்த் திட்டத்தை வகுத்துச் செயல்படுகிறது பிரிட்டிஷ் அரசு.

    ஏற்கெனவே புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால்  பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேர், 12 வாரங்களுக்கு  ஒருக்காலும்  வெளியே வர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தவிர, மற்றவர்களும் அவசியமான தேவைகள் எதுவுமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார் ஜான்சன்.

    பிரிட்டனில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது

     கரோனாவால் பிரிட்டனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 1543 ஆக அதிகரித்துள்ளது.

    கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்கள்

    ஜெய்ப்பூர்: கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்த நான்கு பேருக்கும், பன்றிக் காய்ச்சல், மலேரியா மற்றும் எச்ஐவி பாதித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை ஒன்றிணைத்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    இத்தாலியில் கரோனா பாதித்த 80 வயதுக்கு மேற்பட்டோரை கைவிடுகிறதா அரசு?

    சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வேகமாகப் பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது.  மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா பாதித்த நபா் இன்று வீடு திரும்ப வாய்ப்பு

     கரோனா பாதிப்புக்குள்ளாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபா், பூரண குணமடைந்ததை அடுத்து அவா், திங்கள்கிழமை (மாா்ச் 16) வீடு திரும்புவாா் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் தாக்கம்: ரயில் பயணிகளுக்கு கம்பளிப் போா்வை வழங்குவது நிறுத்தம்

     கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தெற்கு ரயில் வேயில் ஓடும் அனைத்து வகை ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போா்வை வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனாவை விரட்டும் சோப்பு!

     துணி, தோல், மரப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் "கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. அவற்றிலிருந்து நமது கைகளுக்கு வைரஸ் இடம்பெயர்கிறது. பெரும்பாலான நபர்கள் 2 முதல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகள் மூலம் முகத்தைத் தொடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களை அறியாமலேயே இந்தச் செயலை அவர்கள் மேற்கொள்கின்றனர். மேலும் விரிவான செய்திக்கு...

    கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரம் ஊழியா்கள்

     கரோனா தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா பரிசோதனை: தனியாா் ஆய்வகங்களுக்கு அனுமதி இல்லை

     கரோனா பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் விதமாக, அதற்கென தமிழ்நாடு கரோனா வழிகாட்டுதல்- 2020 என்ற புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் எதிரொலி: ரூ. 14 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் தேக்கம்

     கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறிக்கோழி தீவனமான மக்காச்சோளம் பயிரிட்டுள்ள 30,000 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா அச்சுறுத்தல்: முடங்கியது கரூர் ஜவுளி வர்த்தகம்

     தொற்று கரூர் ஜவுளி வர்த்தகத்தையும் விட்டுவைக்கவில்லை. கரோனா அச்சம் காரணமாக கரூர் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விரிவான செய்திக்கு...

    டிரம்ப்புக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை

     அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு செய்யப்பட்ட உடல் நலப் பரிசோதனையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்... மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா: இத்தாலியில் ஒரே நாளில் 368 போ் பலி

     இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 368 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமானோா் உயிரிழந்தது இத்தாலியில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா அச்சுறுத்தல்: பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினாா் ராணி எலிசபெத்

     பிரிட்டன் தலைநகா் லண்டனில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதை அடுத்து அங்குள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணி எலிசபெத் (93), அவரது கணவா் இளவரசா் பிலிப் (98) ஆகியோா் வெளியேறியுள்ளனா். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் உலக நாடுகள் தீவிரம்

     கரோனா வைரஸ் (கொவைட்-19) வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலக நாடுகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகப்படுத்தின. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது

     கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 105 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பலி எண்ணிக்கை 6,063-ஆக உயர்ந்தது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரான், இத்தாலியிலிருந்து தாயகம் திரும்பிய 450 இந்தியர்கள்

     ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கித் தவித்த 450-க்கும் அதிகமான இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனா்.மேலும் விரிவான செய்திக்கு...

    மார்ச் 31 வரை பள்ளிகளை மூட வேண்டும்: சுகாதாரத் துறை இணைச் செயலாளர்

    மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கரோனா பாதிப்பு 107 ஆக உயா்வு: மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 32 போ்

     இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 107-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 32 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா அச்சுறுத்தல்:இந்திய துறைமுகங்களில் கரையிறங்க 25,000 பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

     கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக, இதுவரை 700 கப்பல்களைச் சோ்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளா்கள் இந்திய துறைமுகங்களில் கரையிறங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா: தில்லியில் பாதிக்கப்பட்ட முதல் நபா் குணமடைந்தாா்!

     தில்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபா், மருத்துவ சிகிச்சையில் பூரண குணமடைந்துள்ளாா். இதையடுத்து, ராம் மனோகா் லோகியா மருத்துவமனையிலிருந்து அவா் சனிக்கிழமை வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா பாதிப்பு எதிரொலி: கா்தாா்பூா் யாத்திரைக்கான அனுமதி ரத்து

     கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்கான யாத்திரை, அதற்கான முன்பதிவு ஆகியவற்றை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா: கர்நாடகத்தில் மேலும் ஒருவர் பாதிப்பு

     கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 10-ஆம் தேதி இறந்தார்.  இதைத் தொடர்ந்து,  கர்நாடகத்தில் கரோனா குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா: வங்கதேசத்துக்கான ரயில் போக்குவரத்து ரத்து

     கரோனா பாதிப்பு சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, அண்டை நாடான வங்கதேசத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா: வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

     கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் தடுப்பு கரோனா தடுப்பு: ரூ. 60 கோடி ஒதுக்கீடு

     கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடா் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனாவை எதிா்கொள்ள ரூ.74 கோடி அவசர நிதி: சாா்க் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

     கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவசரகால நிதியை உருவாக்க வேண்டும் என்று சாா்க் நாடுகள் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். இதற்காக, இந்தியா சாா்பில் தொடக்க நிதியாக, 1 கோடி டாலா் (சுமாா் ரூ.74 கோடி) வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா பாதிப்பு: 1.7 லட்சம் பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனை

     கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 1.74 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுகிறது

    கரோனா அச்சம்: அந்தமான் - நிகோபாரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

    புதுதில்லி: கரோனா வைரஸ் பரவலையடுத்து அனைத்து சுற்றுலாத் தலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மூடப்படும் என்று அந்தமான் - நிகோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    19-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்: செல்வமணி அறிவிப்பு

    மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்துவிதமான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு

    திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..

    திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை

    கரோனோ எதிரொலியாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    தமிழகத்தில் 2 இடங்களில் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள்: மத்திய அரசு

    சென்னை: தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    சென்னையில் இயங்கி வரும் கிங் இன்ஸ்டிடியூட் எனப்படும் கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கொவிட்-19 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வுக்கூடம் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தமிழக பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை: அவைத் தலைவர்

    சென்னை: கரோனா அச்சம் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவைத் தலைவர் தனபால் கூறியுள்ளார்.

    மீரட்டில் செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    தில்லியில் 50க்கும் மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை: திருமணத்துக்கு விதிவிலக்கு

    தில்லியில் மத, சமூக, கலாசார, அரசியல் உட்பட எந்த விஷயமாக இருந்தாலும் 50க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற எந்தவொரு நிகழ்ச்சி மற்றும் போராட்டம் உட்பட எதற்கும் புது தில்லியில் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் ஷஹீன் பாக் மற்றும் ஜமியா மிலியா இஸ்லாமியா பகுதிகளில் கடந்த 90 நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கரோனா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? அது எப்போது தெரியும்?

    கரோனா வைரஸ் முதலில் மூக்கு அல்லது வாயில் இருந்து தொண்டையைத் தாக்குகிறது. அதன் பிறகு மூச்சு விடுவதின் மூலமாக நுரையீரலைச் சென்றடைந்த பின்புதான் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் அதிகமாகத் தெரிய வருகிறது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது எப்படி?

    கரோனா.. உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறிப் போன வைரஸின் பெயர். 140 நாடுகளைத் தாக்கி, 5,700க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிவாங்கியிருக்கும் கரோனா இப்போது ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 115-ஆக அதிகரிப்பு

     இந்தியாவில் கரோனா வைரஸால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 117-ஆக அதிகரித்தது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 37 போ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

     சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்கள் மூலம் இந்தியாவிலும் கரோனா பரவியுள்ளது. தலைநகா் தில்லியில் மட்டும் இதுவரை 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    கேரளத்தில் மருத்துவருக்கு கரோனா அறிகுறி: தனிமைப்படுத்தப்பட்ட 25 மருத்துவர்கள்

    ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    மார்ச் 2ம் தேதி ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மையத்தில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

     ஈரானில் இருந்து  4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாட்டிலிருந்து 389 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் கடவுள் கொடுத்த தண்டனை: ஜிம்பாப்வே அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

     பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகளை தண்டிக்கும் கடவுளின் வேலை இது என்று கரோனா வைரஸ் குறித்து ஜிம்பாப்வே பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை தொடங்குகிறது அமெரிக்கா?

     உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,800க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 1,56,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் தற்போது வரை 3,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 117 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் விரிவான செய்திக்கு...

    பள்ளிகளுக்கு விடுமுறை; திரையரங்குகளை மூட உத்தரவு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    இத்தாலியில் சிக்கித் தவித்த 218 பேர் நாடு திரும்பினர்

    இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் 55 தமிழக மாணவர்கள் உள்பட 211 மாணவர்கள் என மொத்தம் 218 பேர் சிக்கித் தவித்தனர். மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா அறிகுறி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பெண், 2 வயது குழந்தை அனுமதி

    வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம்பெண், அவரது 2 வயது பெண் குழந்தை, கரோனா அறிகுறியுடன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். மேலும் விரிவான செய்திக்கு..

    ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கரோனா பாதிப்பு

    உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தற்போது ஸ்பெயின் பிரதமரின் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா பாதிப்பா? திருவாரூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி

    கரோனா வைரஸ் சந்தேகத்தின்பேரில் இன்று ஒரே நாளில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா வைரஸ்: முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம்

    கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    அவசரகால நிதியாக 10 மில்லியன் டாலர்: பிரதமர் நரேந்திர மோடி

    கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சார்க் உறுப்பினர் நாடுகளுடன் காணொலிக் காட்சியில் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, கரோனா வைரஸ் அவசரகால நிதியாக 10 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    கரோனா வைரஸ்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை

    கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி ரயில் பெட்டிகளில் கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏ.சி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும் விரிவான செய்திக்கு..

    புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை: அமைச்சர் அறிவிப்பு

    கரோனா அச்சறுத்தலால் தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    சீரடி கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

    சீரடி சாய்பாபா கோயிலுக்கு சில நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    இந்தியாவில் கரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது

    ஸ்பெயினில் இருந்து ஜெய்பூர் திரும்பியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 105-ஐ எட்டியது. மேலும் விரிவான செய்திக்கு...

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா பரிசோதனை

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் சீன் கான்லி சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் விரிவான செய்திக்கு..

    பஞ்சாப் மாநில நல்வாழ்வுத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம்

    கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் கரோனா: பெங்களூருவில் இருந்து தப்பி ஆக்ரா சென்றவர்

    பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    செய்தி - முதன்முதலில்.. லண்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா!

    பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - உலகில் மிக இளம் வயதில் பாதிக்கப்பட்டவர் என்ற இடத்தைப் பெறுகிறது இந்தக்  குழந்தை.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் அத்தியாவசியப் பொருள்களாக அறிவிப்பு

    கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    தமிழ்நாட்டில் எப்போது?: கரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா திரையரங்குகளை மூடிய எட்டு மாநிலங்கள்!

    இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை மூட உத்தரவிட்ட மாநிலங்களின் பட்டியல்... மேலும் வாசிக்க

    கரோனா வைரஸ் - இதுவரை

    மார்ச் 14, பகல் 11 மணி நிலவரம்

    உலகம் முழுவதும் இதுவரை அறியப்பட்ட -

    கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 1,45,995

    மேலும் விரிவான செய்திகளுக்கு..

    இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம்

     கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்கத் தூதரகம். இதுதொடர்பாக...மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா: அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் டிரம்ப்

    கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்ரு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    நியூஸி. அரசின் புதிய அறிவிப்பினால் ஆஸி. - நியூஸி. கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு!

     ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது... மேலும் வாசிக்க

    அமெரிக்காவில் இதுவரை 50 பேர் உயிரிழப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப்

    கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    கேரளத்தைப் பின்னுக்குத் தள்ளியது மகாராஷ்டிரம்: 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

    மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

    இறந்தவர்களின் உடல்களில் இருந்து கரோனா வைரஸ் பரவாது: தில்லி எய்ம்ஸ்

    இறந்தவர்களின் உடல்களில் இருந்து கரோனா வைரஸ் பரவாது என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

    கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு சிறைத் தண்டனை

    பெங்களூருவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றதற்காக அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா பாதிப்பு: கேரளத்தில் தீவிர கண்காணிப்பில் 6,000 பேர்

    திருவனந்தபுரம்: வெள்ளிக்கிழமை மாலை முதல், கேரளத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் சுமார் ஆறு ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

    சென்னை: தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மழலையர் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா

    ரியாத்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானச் சேவையை முற்றிலும் நிறுத்தியது சவூதி அரேபியா. இந்த இரண்டு வார காலம் என்பது அதிகாரப்பூர்வ விடுமுறையாகக் கருதப்படும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சொந்த நாடு திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தெலங்கானாவில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி: முதல்வர் அறிவிப்பு

    ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தெலங்கானாவில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய நிலையில், இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கரோனாவை பேரிடராக மாநில அரசு கருத வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

    கரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    பள்ளி, கல்லூரி, கிளப்புகளை மார்ச் 31ம் தேதி வரை மூட கோவா முதல்வர் உத்தரவு

    பனாஜி: கரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கிளப்புகளை மார்ச் மாதம் 31ம் தேதி வரை மூட கோவா முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    ஸ்விட்சர்லாந்தில் ஏப். 20 வரை பள்ளிகள் மூடல்

    ஸ்விட்சர்லாந்தில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இரு வார விடுமுறை என்பதால் பள்ளிகள் மூடிக் கிடக்கும். ஏப். 20 ஆம் தேதி நாட்டின் அன்றைய நிலையை பார்த்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்விட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை!

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது... மேலும் வாசிக்க

    இத்தாலியில் சீன மருத்துவ நிபுணர்கள் குழு

    கொவைட்-19 நோய் தடுப்புக்கு ஆதரவு அளிக்கும் வீதம் சீன நிபுணர்கள் குழு 12ஆம் தேதி நள்ளிரவு இத்தாலி தலைநகரைச் சென்றடைந்தனர். 

    கரோனா அச்சுறுத்தல்: கைகளை முறையாகக் கழுவுவது எப்படி?

    கரோனா வைரஸ் அச்சுறுத்தல் - அவசர தொலைபேசி எண்கள்

    சீனப் பள்ளிகளில் கிருமி நீக்க நடவடிக்கை

     சீனாவின் ஹுனான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் பள்ளி வளாகங்களில் கிருமி நீக்க நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

    கரோனா: ஒடிஸாவிலும் பள்ளி, கல்லூரி, திரையரங்கு மூடல்

    விளையாட்டுகளுக்குத் தடை : தில்லி மாநில அரசு முடிவு

    தில்லியில் அனைத்து விதமான விளையாட்டு நிகழ்ச்சிகளும் தடை விதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

     கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் கூட்டங்கள் கூடாமல் இருப்பது நல்லது என்பதால் இந்த முடிவு என்றும் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

    சர்வதேச கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ்

     செல்சே கால்பந்து கிளப் அணியின் வீரர் கேலம் ஹுட்ஸன் உடோய் மற்றும் ஆர்சனால் கால்பந்து கிளப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைகெல் ஆர்தேதா ஆகியோருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    தென் ஆப்பிரிக்க தொடர்: பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு

    தென் ஆப்பிரிக்காவுடனான இரு ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    மீண்டும் 3 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், நிலைபெற்ற நிஃப்டி வர்த்தகம்

    கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கி மீண்டும் 3 ஆயிரம் புள்ளிகள் ஏற்றம் கண்டது. மேலும் விரிவான செய்திக்கு..

    ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

    கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நேரிட்டு வரும் பொருளாதார நிலைக்குலைவின் காரணமாக  இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூபாய் 74.5 ஆகக் குறைந்தது. இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 

    இத்தாலியில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

    இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா வைரஸை அமெரிக்க ராணுவம் பரப்பியிருக்கலாம்: சீனா குற்றச்சாட்டு

    பெய்ஜிங்: சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு அதிகாரி புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா வைரஸ் - மார்ச் 13, பகல் 11 மணி நிலவரம்

    சீனா தொடங்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,34,769 என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா வைரஸ் - மார்ச் 13, பகல் 11 மணி நிலவரம்

    சீனா தொடங்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,34,769 என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    தில்லியில் இரண்டாவதாக பெண் மரணம்

    கரோனா வைரஸ் தொற்றுக்காகத் தில்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.

    பெங்களூருவில் கூகுள் ஊழியருக்கு கரோனை வைரஸ்: அலுவலகம் மூடல்

     பெங்களூருவில் செயல்பட்டு வரும் தங்கள் கிளையின் ஊழியருக்கு கரோனை வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூகுள் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகள் சரிவு, நிஃப்டி வர்த்தகம் நிறுத்தம்

     கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மேலும் செய்திகளுக்கு...

    கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக உயர்வு

    கரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972-ஆக உயர்ந்துள்ளது.

    கனடா பிரதமர் மனைவிக்கு கரோனா வைரஸ்

     கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடோவுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    கனடா பிரதமர் மனைவிக்கு கரோனா வைரஸ்

     கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடோவுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

    குவைத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து

    கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக  குவைத்தில் வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் வாராந்திரத் தொழுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும் வாசிக்க

    கரோனா வைரஸ் பாதிப்பு: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 81 வயது முதியவருக்கு சிகிச்சை

    கரோனாவைரஸ்காய்ச்சலால்பாதிக்கப்பட்டநிலையில் 81 வயதுமுதியவர்ஒருவர்வேலூர்சிஎம்சிமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குஅவருக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருவதாகமருத்துவமனைநிர்வாகம்தெரிவித்துள்ளது.  மேலும் வாசிக்க

    இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

    இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.மேலும் விரிவான செய்திக்கு..

    இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

    இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா எதிரொலி: கர்நாடகம், பிகாரில் கல்வி மையங்கள், திரையரங்குகள் மூடல்

    கரோனா பாதித்த முதியவர் மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    சுடுநீரில் குளிப்பதால் கரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

    கடுமையான வெப்பத்தில் கரோனா வைரஸ் பரவாது என்பது எவ்வாறு நிரூபிக்கப்படவில்லையோ அதுபோலவே சுடுநீரில் குளிப்பதால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதும் உண்மை. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முடியுமா?

     சீனாவிலிருந்து பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்றைத் தடுத்துக் கொள்ளும் உபாயங்களை  இந்திய மருந்துவ முறை மூலம் எவ்வாறு பெறலாம்? பல உயிர்களை ஒரு சேர பலி கொள்ளும் இந்த வைரஸை நினைத்து உலக நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இதற்தான தடுப்பு உத்திகள் எவை?  மேலும் செய்திகளுக்கு....

    கர்நாடகாவில் கரோனா பாதித்தவர் பலி: கலபுர்கியில் தனிமைப்படுத்தப்பட்ட 46 பேர்

    கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கரோனா பாதித்தவர் உயிரிழந்த நிலையில், அவருடன் நேரடித் தொடர்பில்இருந்த 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா அச்சுறுத்தல்: கேரள, ஒடிஸா பேரவைகள் ஒத்திவைப்பு

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தில்லி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தற்போது கேரளம் மற்றும் ஒடிஸா சட்டப்பேரவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் விரிவான செய்திகளுக்கு..

     கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வருட ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது... மேலும் விரிவான செய்திக்கு

    கர்நாடகாவில் கரோனா பாதித்தவர் பலி: கலபுர்கியில் தனிமைப்படுத்தப்பட்ட 46 பேர்

    கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கரோனா பாதித்தவர் உயிரிழந்த நிலையில், அவருடன் நேரடித் தொடர்பில்இருந்த 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்திகளுக்கு..

    மேலும் பல குடும்பங்கள் பிரியமானவர்களை இழக்க நேரிடலாம்: பிரிட்டிஷ் பிரதமர் உருக்கம்

    நாட்டில் மேலும் பல குடும்பங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை இழக்க நேரிடலாம் என மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். பிரிட்டனில் இதுவரை கரோனா வைரஸ் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 596 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா வைரஸ்: ஜேஎன்யு பல்கலைக்கழக வகுப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தி வைப்பு

     கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகா் தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வகுப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு....

    லம்போர்கீனி கார் தயாரிப்பு தொழிற்சாலை மூடல்

    கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் மிகப் பெரிய விளையாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லம்போர்கீனி தொழிற்சாலை மூடப்பட்டது.

    லம்போர்கீனி நிறுவனத்தின் அனைத்து வகையான கார்களும் இத்தாலியின் வடபகுதியிலுள்ள பொலக்னா நகரின் புறநகர்ப் பகுதியில் தயாரிக்கப்படுகின்றன.

    இத்தாலியில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரு வாரங்களாக தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதாக அறிவிப்பொன்றில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கரோனா வைரஸ் பரவலில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

    கரோனா எதிரொலி: பாட்னா மருத்துவமனை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து

    கரோனா வைரஸ் எதிரொலியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் விடுப்பை ரத்து செய்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

    சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா: இத்தாலியில் 2 நாட்களாக கணவரின் உடலுடன் தவிக்கும் பெண்

    இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, அந்த நாடு முழுவதும் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம்: விஜயபாஸ்கர் அறிவுரை

    சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், கேரள மாநிலத்துக்குச் செல்வதை தமிழக மக்கள் தவிர்க்கலாம் என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.  மேலும் விரிவான செய்திகளுக்கு..

    ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தடை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

     கரோனா வைரஸ் தொற்றுநோயாக பரவி வருவதை அடுத்து ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கு  தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக அமெரிக் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் விரிவானசெய்திக்கு...

    கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ரோம், மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து

     இத்தாலியில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும் விரிவானசெய்திக்கு...

    சீனாவில் கரோனா வைரஸ் தொற்று: பலியானோர் எண்ணிக்கை 3,169 ஆக உயர்வு

    சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 3,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனாவைப் பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சந்தையில் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் குறைந்திருக்கிறது.

    கரோனா லைவ் அப்டேட்ஸ்: ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சனுக்கு கரோனா வைரஸ் உறுதி

     பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.  மேலும் விரிவான செய்திக்கு...

     கரோனா வைரஸ், தாக்கம் பற்றி விவாதிப்பதற்காக மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.  சுப்பிரமணியம் சுவாமி,  இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வினய் விஸ்வம் ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    கேரளத்தில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி: முதல்வர் பினராயி

    கேரளத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு..

    அரக்கோணத்தில் இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி?

    அரக்கோணத்தில் இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.  மேலும் விபரங்களுக்கு

    கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் - மார்ச் 12, மாலை 6 மணி நிலவரம்

    மார்ச் 12, மாலை 6 மணி நிலவரம்

    உலகம் முழுவதும் இதுவரை அறியப்பட்ட -

    கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 1,28,872

    உயிரிழந்தவர்கள் - 4,729 மேலும் விவரங்கள் அறிய..

    கரோனா அச்சுறுத்தல்: தில்லியில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மூடல்

    கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக தில்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

    கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

     வரும் 14-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை அணியுடன் மோதுகிறது கொல்கத்தா... மேலும் படிக்க

    கரோனா எதிரொலி: ஐபிஎல் ஆட்டங்களின்போது மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு?

    கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யாருமில்லா மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.... மேலும் படிக்க

    பயத்துக்கு 'நோ', முன்னெச்சரிக்கைக்கு 'யெஸ்': கரோனா குறித்து பிரதமர் மோடி ட்வீட்

    கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து அச்சம் கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..

    தில்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை

     கரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக தில்லியில் தேர்வு நடைபெறாத பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    ஆந்திராவில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு

     ஆந்திராவில் கரோனா பாதிப்பு இருக்கும் முதல் நபர் கண்டறியப்பட்டுள்ளார். இத்தாலியில் இருந்து திரும்பிய மாணவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர்? கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் கேரளம்

    புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 73 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

    கரோனா வைரஸ் உலகளாவிய ஒரு நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து, காரோனாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் விரிவான செய்திகளுக்கு...

    கரோனாவில் இருந்து தப்பிக்க தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட இந்தியா

     தனிமை.. கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கரோனா பாதித்தவர்களிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுக்கவும் ஒரே முக்கிய வழி தனிமைதான். அதைத்தான் இந்தியாவும் செய்துள்ளது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    துருக்கியில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு

    துருக்கியில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    துருக்கியில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு

    கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் முதல் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...www.dinamani.com/latest-news/2020/mar/11/turkey-reports-first-coronavirus-case-3378964.html

    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்வு

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,158 ஆக உயர்ந்துள்ளது.மேலும் விரிவான செய்திக்கு...

    'நினைத்ததை விட ஆபத்து அதிகம்' - கரோனா குறித்து ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!

    கரோனா வைரஸ் நாம் நினைத்ததைவிட நீண்ட தூரத்திற்கு பரவும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

    அதன்படி, ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கரோனா வைரஸ் 30 நிமிடங்கள் காற்றில் பரவி இருக்கும். பல்வேறு வகையான மேற்பரப்புகளில் பல நாட்கள் உயிர்வாழ முடியும்..  மேலும் விரிவான செய்திக்கு...

    'நினைத்ததை விட ஆபத்து அதிகம்' - கரோனா குறித்து ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!

    www.dinamani.com/lifestyle/lifestyle-news/2020/mar/11/coronavirus-bug-can-cover-longer-distances-than-previously-thought-3378963.html

    கரோனா வைரஸ் நாம் நினைத்ததைவிட நீண்ட தூரத்திற்கு பரவும் தன்மை கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கரோனா வைரஸ் 30 நிமிடங்கள் காற்றில் பரவி இருக்கும். பல்வேறு வகையான மேற்பரப்புகளில் பல நாட்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிய வந்துள்ளது.

    கரோனா அச்சுறுத்தல்: பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வரத் தடை

    உலகயளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா அச்சுறுத்தல்: பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வரத் தடை

    உலகயளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு... ங்கே சொடுக்கவும்.

    தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் இருந்து கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ">தமிழகத்தில் இருந்து கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்யக் கோரி பொது நல வழக்கு

    கரோனா விழிப்புணர்வுக்காக இருமல் சத்தத்துடன் உருவாக்கப்பட்டுள்ள காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

    மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

    மும்பையில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதையடுத்து, மகாராஷ்டிரத்தில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

    கரோனாவில் இருந்து மீண்டு வந்தது எப்படி? கேரள பெண்ணின் அனுபவம்

    திரிச்சூர்: உலக நாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதித்த முதல் கேரள பெண் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா இருப்பது கடந்த ஜனவரி 30ம் தேதி உறுதி செய்யப்பட்டது.மேலும் விரிவான செய்திகளுக்கு.. 

    கரோனாவில் இருந்து மீண்டு வந்தது எப்படி? கேரள பெண்ணின் அனுபவம்

    திரிச்சூர்: உலக நாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதித்த முதல் கேரள பெண் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா இருப்பது கடந்த ஜனவரி 30ம் தேதி உறுதி செய்யப்பட்டது. மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கேரளத்தில் கரோனா பாதித்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்

    கோட்டயம்: கேரளத்தில் கரோனா பாதித்து கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்டவை இருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது 96 வயது கணவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரிவான செய்திகளுக்கு.. 

    கரோனா: கர்நாடகத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

    இந்தியாவில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார்.  இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது.மேலும் விரிவான செய்திகளுக்கு..

    கரோனா பாதிப்பு உயர்வு: மத்திய, மாநில அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

     கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு முறையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் தில்லி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா பாதிப்பு: தில்லியில் மத்திய அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் கரோனா வைரஸ் குறித்த அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும் விரிவான செய்திக்கு...

    இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலி: கர்நாடகத்தில் முதியவர் மரணம்

    ஹைதராபாத்: இந்தியாவில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார்.  இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது. மேலும் விரிவான செய்திக்கு..

    கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

     கரோனா வைரஸ் பரவியது முதல் தற்போதுவரை, இவ்வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் சீனா மற்றும் அமெரிக்காவின் வெவ்வேறான செயல்கள் தெளிவாக காணப்படுவதை அறிய முடிகிறது. மேலும் விரிவான செய்திக்கு..

    இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

    சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் விரிவான செய்திக்கு...

    இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

    சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விரிவான செய்திக்கு...

    கரோனா? நெல்லை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

    தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியில் இளைஞர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் விரிவான செய்திக்கு...

    கனடாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் பலி

    மான்டிரீயல்: கனடாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் விரிவான செய்திக்கு...

    ஈரானில் இருந்து ராணுவ விமானம் மூலம் 58 இந்தியா்கள் மீட்பு

    புது தில்லி: ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தவித்து வந்த 58 இந்தியா்கள் ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் விரிவான செய்திக்கு...

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

    பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

    சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

    அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

    SCROLL FOR NEXT